26.3 C
Jaffna
Wednesday, December 4, 2024
ஆசாரங்கள் (Etiquette) மனிதனின் மனதை ஒரே அளவாக இயங்க வைத்து, ஆசைகளை அழகாய் ஆளுகை செய்கின்றது. அத்தகைய உயர் ஆசாரங்களை தனது வாழ்வுதனிலே இறுக்கமாய் பின்பற்றியே வாழ்ந்த ஐயா! ஈழவிடுதலைப் போராட்டக் களத்தில் காத்திரமாய்ப் பங்கெடுத்த வீரநெஞ்சம் கொண்ட மகனைப் பெற்றெடுத்த ஐயா! ஈரநெஞ்சம் கொண்ட இளைய மகனான ஒரு கவிஞனை எமக்காய் தந்த ஐயா! தனது வாழ்நாட்கள் முழுவதும் "அறம்"தனையும் "மறம்"தனையும் அழகழகாய் காத்திட்ட ஐயா! அகவொழுக்கம் கொண்ட அருமாந்தராய் வாழ்ந்து ஊராருக்கும் தமிழறவுகளுக்கும் வழிகாட்டிய ஐயா! என்றென்றும் எங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஐயா! 01) ஆன்மீகவாதிகள் 02) ஒழுக்கவாளர்கள் 03) உழுதூண் விரும்பும் பெருங்குடிகள் 04) கல்வியாளர்கள் 05) கலையாளர்கள் 06)...
உலக வரலாற்றில் வீரம் சொரிந்த மறவர்களின் வாழ்க்கையைப் படித்தோம். இன மத பேதமின்றி படித்தோம். ஆனால் எங்களை அவர்களின் வழித்தோன்றல்கள் படிக்கும் வரலாற்றினைப் படைத்தோம். அந்த வரலாற்றின் பல பக்கங்களில் இருக்கக் கூடிய பெயர்களில் ஒன்று பால்ராஜ் ஆதிக்க வெறிகொண்ட அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கையிலோ அல்லது வல்லாதிக்கச் சிந்தனை கொண்ட சீனாவின் கொம்னிசக் கொள்கையிலோ நாம் உடன்பாடு கொண்டவர்கள் அல்ல, ஆனாலும்.... "அறப்போர்" செய்த தமிழர்களாகிய எங்கள் மீது "ஆயுதப்போர்” திணிக்கப்பட்ட போது நவீன போரியலை எல்லா நாடுகளிடம் இருந்தும் படிக்க வேண்டியே இருந்தது ஆதலால் படித்துக்...
ஒரு கட்டத்தில் ஒக்சிஜன் சிலிண்டேர்களும் (Oxygen cylinders ) முற்றாகத் தீர்ந்து போனது அதன் பின்னர் ஒக்சிஜன் கொன்சென்றேற்றர்கள் ( Oxygen Concentrators) எமக்குக் கைகொடுத்து ஈற்றில் அவையும் செயலிழந்து போனது! 🥲 பொதுவாகவே ஒரு வைத்தியசாலையில் எல்லா நோயாளருக்கும் ஒக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. ஆனால் மயக்க மருந்து கொடுப்பதற்கும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் (ICU Management ) ஒக்சிஜன் அத்தியவசியமானது. ஒக்சிஜனைவிட அதிகம் அதிகம் அதிகமான காயமடைந்த பொது மக்களுக்கும் விழுப்புண் அடைந்த வீரர்களுக்கும் தேவைப்பட்ட ஏனைய அத்தியவசிய மருந்துகள் இல்லை என்றான...
எங்கள் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் (DGH of Kilinochchi) முன் பக்கத்திலும் அயலிலும் நெருக்கமாக #ஆட்லெறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. நோயாளர்களை பாதுகாக்கும் நோக்கில் Dr.த.சத்தியமூர்த்தி மற்றும் Dr.ம.பிறைற்றன் தலைமையிலான மருத்துவப் பணியாளர்கள்,மருத்துவப் போராளிகள் அந்த வைத்தியசாலையினை தருமபுரம் வைத்தியசாலைக்கு பின் நகர்த்தி இருந்தனர். நோயளர்கள் படுக்கும் கட்டில்கள் உட்பட சில மருத்துவ உபகரணங்கள் தருமபுரத்திற்கு பாதுகாப்பாக நகர்த்தப்பட்டிருந்தாலும் Medical Ventilators இனை உடனடியாக கழற்றி தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு வரமுடியவில்லை.   அந்த காலகட்டத்தில்தான் கடுமையாக மழை பெய்த ஒரு நாளில் மட்டும் இருபதிற்கும் அதிகமானோர் பாம்புக்கடிக்கு...
சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் மெய்பொருள் நாயனார். அந்த நாயானார் வீரத்தில் சிறந்தோங்கிய ஒரு குறுநில மன்னனும் ஆவார். அறநெறிதவறாது அரசு புரிந்துவந்த மெய்ப்பொருள் நாயனார் பகையரசர்களால் கேடுவிளையாதபடி தனது குடிகளைக் கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தார். சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட இவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார். மன்னனாகிய இந்த மெய்ப் பொருள் நாயனாரை போரிலே வெல்ல முடியாத எதிரி ஒரு முறை இவரை வஞ்சகத்தால் கொல்ல முற்பட்டான். மெய்ப்பொருள் நாயனாரிடம் பல முறை போரிட்டுத் தோற்று...
"Charity begins at home." ஆங்கிலப் பழமொழியானது மேலே இயம்புவதைப் போல "தான தருமங்கள் வீட்டிருந்து ஆரம்பிக்கின்றன." எங்கள் போராளிகளிடன் எண்ணிலடங்காத் திறமைகளும் தயையும் தலைவரின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் அந்தப் போராளிகளின் வீட்டிலும் பாடசாலையிலும் பெறப்பட்டவை ஆகும். இன்னொரு வகையில் சொன்னால் தமிழன் மரபணு(DNA) வழியே பத்திரமாக மெல்லப் பக்குவமாகக் கடத்தப்பட்டவை ஆகும். இன்று உலகத் தமிழினத்தால் வெகுவாக அறியப்பட்ட எங்கள் போராளித் தங்கை சோபாவின் வரலாறும் அதற்கு எந்த வகையிலும் விதிவிலக்கானது அல்ல! ஆம், சோபா யாழ்/வேம்படியில் கல்வி கற்ற போதிலும் இடப்பெயர்வின் பின் வன்னி...
"நகைச்சுவை வாயிலாக உடல் உள செயற்பாடுகளை எழுச்சி பெறச்செய்து ஆற்றல் மிக்க கற்பித்தலை முன்னெடுக்கலாம்."... என நவாலியூர் சோமசுந்தரப்புலவர் திருவாய் மொழிந்த மொழிகளுடன் இந்தப் பதிவினை ஆரம்பிக்கின்றேன்.   அவர் நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்ற சமூகக்கல்வி ஆசிரியப் பெருந்தகை! அவர் பாடம் தொடங்கி நிறைவு பெறும் போது எமக்கெல்லாம் சிரித்துச் சிரித்தே அடிவயிற்றில் நோவு எடுக்கும். "நாடுகளும் அதன் தலைநகர்களும்" எனும் தலைப்பில் படிப்பிக்கும் போது, "கொப்பன்பேயன்" என்று சொல்வார்! அந்த வாத்தி வி(மு)றைத்தபடி கண்களைப் பார்த்தே பாடம் சொல்வார்! ஒரு முறை வாத்தி என்னருகே இருந்த எந்தன் நண்பனிடம் 'கொப்பன்பேயன்' எனச்...
  எந்தப் பெரிய படையே தன் எதிரே அணிவகுத்து நின்றாலும் துளியேனும் அஞ்சாது போரிடும் குணாம்சத்தால் மட்டுமல்ல "பாலசேகரம்" என்ற இவர் "குலசேகரம்" வைரமுத்து பண்டார வன்னியனின் வாரிசாகவே நோக்கப்படுகின்றார். "லீமா” எனும் குறியீட்டுப் பெயரினால் களத்திடையே கனகாலம் வாசம் செய்த இவரின் இயற்பெயர் கந்தையா பாலசேகரம் ஆகும். எந்தப் பெரிய படையே தன் எதிரே அணிவகுத்து நின்றாலும் துளியேனும் அஞ்சாது போரிடும் குணாம்சத்தால் மட்டுமல்ல "பாலசேகரம்" என்ற இவர் "குலசேகரம்" வைரமுத்து பண்டார வன்னியனின் வாரிசாகவே நோக்கப்படுகின்றார். எங்கள் சமர்க்களநாயகன் சமர்களில் சமர்த்தன் என்பதை இந்த உலகமே...
பளையிலிருந்து தவழ்ந்து -அந்த வெப்பதிடல் தாண்டி வந்த உப்புக்காற்று உன்பெயரை கூறிச் சத்தமிட்டு பாடுகின்றது. ஆனையிறவில் பொங்கிய அலையின் - புலிச்சேனையின் வீரத்தை உலகமே வியந்தது உன் வீரத்தையும் கூடத்தான் எம்மோடு நீயிருந்த காலங்களையெல்லாம் கண்ணீரோடு நாம் எண்ணிப் பார்க்கின்றோம்! பலவருடங்களாக உன் சேவை விடுதலைப் பாதைக்கு குடைபிடித்திருக்கின்றது அண்ணன் சேவையில் நிரந்தரமாய் இணையுமுன்னரே சுதந்திரப் பறவைகளாய் எதிரியின் கரங்களுக்குள்ளாக புலிகளுக்கு பெரும்பணி செய்தவள் - நீ அதன் பின்னரோ மருத்துவத்தில் உன்சேவை மகத்தானது விடுதலைப் போராட்டத்திற்காக வீர்ர்களின் உயிர்களுடன் உன் போராட்டம் மருத்துவக் கல்லூரியின் பிறப்பிலிருந்தே கருத்துடன் உன்...
இலக்கை அடைய அதிக காலம் எடுத்துக்கொள்வது தோல்வி ஆகாது.  எமக்குள்ளேயும் எம்மவருக்குள்ளேயும் யாராலும் கண்டுகொள்ள முடியாத பல திறமைகள் புதையுண்டு கிடக்கின்றன. அதனை அடையாளப்படுத்த முயற்சி எடுப்போம். அதை அத்திபாரமாகக் கொண்டு முயற்சியை தொடருவோம். எமது இலக்கை நோக்கியநகர்வுகள் தான் முக்கியமானவை. அதனை அடைய நாம் அதிக காலம் எடுப்பதுதோல்வி என்று அர்த்தப்படாது. வாழ்வில் ஒவ்வொருதடங்கலும் ஏற்படும் பொழுது எம் நிலையைமீளாய்வு செய்து நாம் விட்டதவறுகளை அறிந்து திருத்தி எமது வாழ்க்கை பயணத்தை தொடர்வது ஆரோக்கிய நகர்வாக அமையும். வைத்திய நிபுணர் Dr.சி.சிவன்சுதன்

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS