“சண்முகவாசா” சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்களுக்கு அஞ்சலிகள்!

ஆசாரங்கள் (Etiquette) மனிதனின் மனதை ஒரே அளவாக இயங்க வைத்து, ஆசைகளை அழகாய் ஆளுகை செய்கின்றது.

அத்தகைய உயர் ஆசாரங்களை தனது வாழ்வுதனிலே இறுக்கமாய் பின்பற்றியே வாழ்ந்த ஐயா!

ஈழவிடுதலைப் போராட்டக் களத்தில் காத்திரமாய்ப் பங்கெடுத்த வீரநெஞ்சம் கொண்ட மகனைப் பெற்றெடுத்த ஐயா!

ஈரநெஞ்சம் கொண்ட இளைய மகனான ஒரு கவிஞனை எமக்காய் தந்த ஐயா!

தனது வாழ்நாட்கள் முழுவதும் “அறம்”தனையும் “மறம்”தனையும் அழகழகாய் காத்திட்ட ஐயா!

அகவொழுக்கம் கொண்ட அருமாந்தராய் வாழ்ந்து ஊராருக்கும் தமிழறவுகளுக்கும் வழிகாட்டிய ஐயா!

என்றென்றும் எங்கள்
அன்புக்கும் மதிப்புக்கும்
உரிய ஐயா!

01) ஆன்மீகவாதிகள்
02) ஒழுக்கவாளர்கள்
03) உழுதூண் விரும்பும் பெருங்குடிகள்
04) கல்வியாளர்கள்
05) கலையாளர்கள்
06) கவிஞர்கள்
07) புலவர்கள்
09) போர் வீரர்கள்
08) விளையாட்டு வீரர்கள்

எனப் பல தரப்பட்ட திறனாளர்களால் எழுதப்பட்ட வயவையூரின் வல்ல வரலாற்றில் எங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான ஐயா ஒரு தனி அத்தியாயம் ஆவார்!

அன்பின் உருவம் கொண்ட
ஐயாவே!,

எந்தையுடன் தெய்வ சொர்க்கமதில்
ஓய்வு கொள்ளுங்கள்!🙏