அழகால் மாந்தரை ஆளும்
அற்புதமே!🦌
மனதை மயக்கும்
மானினமே! 🦌
மாங்கனித்தீவின் உய(யி)ர்
மரகதமே!🦌
புள்ளிகள் கொண்ட
பூங்கவிதையே! 🦌
துள்ளி ஓடும் – பொற்
சித்திரமே! 🦌
காட்டிலே வாழ்ந்தாலும்- காதல்
பாட்டிலே வந்து பெண்ணை அலங்கரிக்கும்
பதுமையே! 🦌
ஐய்யகோ!🥲
ஐயர் அமர-உந்தன்
தோல் வேண்டுமாம்!
உப்புடன் சாம்பலிட்டு
உவப்புடன்-உந்தன்
தோலினை பதப்படுத்தும் எந்தன்
தோழனின் மனதினை,
மதம் பதப்படுத்தவில்லையே!🤔