உன்னங்கள் நெருக்கமாய் நின்று சன்னதமாடிய
அந்த வெங்களத்தை சன்னங்கள்
சல்லடை போட்டுக் கொண்டிருந்தன.
ஆட்லெறிகள் ஆர்ப்பரித்தன.
அஞ்சிஞ்சி வகை எறிகணைகள் இஞ்சிக்கு இஞ்சி வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.
இயந்திர யானைகள் ( யுத்தராங்கிகள் ) ஈழதேசமே அதிரப் பிளிறிக் கொண்டிருந்தன.
தலைக்கு மேலே இசுரேலிய மற்றும் உக்ரைன் தயாரிக்கு இயந்திர வல்லூறுகள் சுற்றிச் சுற்றியே குண்டுகள் பொழிந்து கொண்டிருந்தன.
நெருப்பினை உமிழ்ந்த
அத்தனை இரும்புத் துண்டுகளும் ஈழ அன்னையின் உடலையும் அவள் அன்புக்குரிய வீரக்குழந்தைகளின் உடல்களையும் சல்லடை போட்டுக் கொண்டிருந்தன.
அந்தக் கொடிய நேரம்தான்…இது நடந்தது.
ஆம்,
முன்னங்காலுடன் குருதிக் குழாய் முற்று முழுதாய் அறுந்து சீறிப்பாய்ந்த போது அங்கிருந்த ஒரு புதிய போராளி கண்களை மூடிய வண்ணம் ஓடி ஒளிந்து
கொண்டான்!
எத்தனையோ படுகாயங்களைப் பார்த்துச் சிகிச்சை அளித்த அவளால் இந்த அவலத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை.
இன்னுமோர் போராளியை மரண வாசலில் இருந்து மீட்டுக் கொண்டிருந்த இவன்
ஓடோடிச் சென்று குருதி அமுக்கத்தை அளக்கப் பயன்படுத்தும் BP பொக்ஷின் கவ்வினை ( Cuff of BP box ) சிதைந்து தொங்கிக் கொண்டிருந்த
காயத்திற்கு மேலே உள்ள பகுதியில் சுற்றிவிட்டு 120 mmHg மேல் BP meter மூலம் வெளிபுற அமுக்கத்தை இனை உயர்த்திய போது நிலைமை கட்டுக்குள் வந்தது.
இது காலுக்குரிய பென்னம் பெரிய நாடி ( Main branches of Femoral Artery ) என்பதால் இந்த இடத்தில் குருதி தடுப்பு பஞ்சனை(Field compresure) மூலம் அமுக்கத்துடன் சீறிப் பாயும் குருதிப்பெருக்கினை கட்டுப்படுத்தவே முடியாது.
அசாத்தியம்தனைச் சாத்தியம்
ஆக்கிய சாதனைச் சமர்களைப் போலவே காலனவனுடன் போராடி ஓர் இன்னுரைக் காத்திட்ட இந்தச் சம்பவத்தை அறிந்திட மேலும் கீழே வாசியுங்கள்.
மறத்தமிழர் மரபணு வழிவந்த உதவிடும் பண்பும் அதை விஞ்சி நின்ற “புத்தி சாதுரியமும்”…
பெருந்தலைவர் மேதகு தந்த”அச்சம் தவிர்”த்தலும் அன்று இவனது இன்னுயிரைக் காக்க இவனுக்குக் கைகொடுத்தது.
அன்று உயிரிழக்கும் தறுவாயில் இருந்த இந்தத் தமிழ்வீரன் இன்று காலிழந்தாலும் கலங்காமல் சமூகப் பிரஞ்ஞையுடன் தனது பணி தொடர்கின்றான் என்பதை அறியும் போது பிறவிப் பயனை அடைந்ததாகவே உணர்கிறான்.
கல் நெஞ்சு படைத்த மாந்தர் நடுவே கட்டிடக் காடுகள் மத்தியில் வாழும் இவனதும் இவன் தோழர்கள் காதையும் “சல்லியர்கள் எனும் திரைக்காவியம்” ஆகியே நிற்கும் பெருமை மிக்க இந்த இனிய பொழுதில் தனது தோழோடு தோள் நின்ற
மருத்துவப் போராளிகள்
அனைவரையும் பேரன்போடும் நன்றியோடும் அடி நெஞ்சின் ஆழத்தில் அகலமாய் நினைந்து கொள்கின்றான். 🙏