போர்க்களமாடிய கவிச்சமரியன்.

எக்களத்திலும் எக்காலத்திலும் பிறக்கவல்லது கவிதை. காதலின் புலத்திலும் கொலைக் களத்திலும் ஆடக் கூடியவன் கவிஞன். அதனால்த்தான் கவிஞன் ஆகிறான் கடமை தவறாதவன்.

இரண்டாயிரமாம் (2000)ஆண்டு இத்தரை பூத்துச் சிரிக்கும் சித்திரை மாதம் செம்பியன்பற்றுக்கும் இத்தாவிலுக்கும் இடையே உள்ள நீரேரி ஊடக ஒரு கவிஞரை அழைத்துச் சென்றேன்.

தமிழர்களின் போர்க்கடவுளையும் அவருடன் அருகிருந்த காவல் தெய்வங்களையும் தரிசிக்கச் சென்ற ஒரு புனிதபயணம் அது ஆனாலும் மிகவும் ஆபத்தான பயணம்.

எறிகணைகளால் மண்ணும் விண்ணும் அதிர்ந்து கொண்டிருக்க கவிஞர் தூயவனோ எதனையும் பொருட்படுத்தாமல் கண்டல் தாவரைத்தையும்
(Mangrove) அதன் மிடுக்கான மிண்டி வேரையும் இரசித்தபடியே வந்தார்.🦋

இயற்கையின் சலனத்தோடு ஒட்டிக் கொண்ட அக் கவிஞரின் தன்மைக்குக் ‘கவிதைஉள்ளம்‘ என்று பெயர்.

ஆம்!

மிடுக்கு நிறைந்த இந்த நன்னாளில் (26/03)
எம் மண்ணில் அழகழகான பசுங்கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் அனைவருக்கும்
எங்கள் நன்றிகள்!✊

(பூநகரியில் கண்டல் தாவரங்கள் நடுகை)