பகிரப்படாத பக்கங்கள் பற்றி..

108

“பகிரப்படாத பக்கங்கள்” என்ற இந்த நூலில் சுமார் இருபது தேவ தேவதைகளின் வரலாற்றுக் குறிப்புகள் பதியம் செய்யப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

அதிலும் தமிழீழ மருத்துவத்துறை சார்ந்த பலரது குறிப்புகள் அதிகம் வாசிக்க கிடைத்தன.

 

உண்மையில் தமிழீழ மருத்துவர்களுக்கு நிகராக எங்குமே வேறு மருத்துவர்களைப் பார்த்ததில்லை.

தமிழீழ மருத்துவர்களுடனான எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும், இந்த நூலின் பதிவுகளிலிருந்தும் அவர்கள் ஒரு தனி வரம் பெற்றவர்கள் என்றே சொல்ல முடியும்.

அவர்களுக்கான வரமும் தரமும் அவனொருவனிடம் இருந்தே கிடைத்திருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.

சொல்லப்போனால் இங்கே ஒவ்வொரு பகுதியாக பகிரப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாவீரர்களின் சரித்திரமும் ஒரு வரலாற்று நூலாக தொகுக்கப்பட முடியும். தொகுக்கப்பட வேண்டும்.

கடந்து வந்த அவர்களது அனுபவப் பாதைகள் என்பது எந்த வேதங்களோ, இலக்கியங்களோ, இதிகாசங்களோ தொட்டுக் காட்டிடாதவை. தொட்டுக் காட்ட முடியாதவையும் கூட.

நினைத்த மாத்திரத்தில் மந்திரம் சொல்லி வானத்தில் பறக்க இவர்கள் ஒன்றும் சோமபான போதையில் எழுதி முடிக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல.