‘தகுதி’ என்ற மூன்றெழுத்துக்கு தகுதியானவர் யார்?

376

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையுடனேயே பலவிதத்தில் முயற்சி செய்து முன்னேறி வருகின்றான். ஆனால் பலவழிகளில் முயற்சி செய்து இந்தச் சமூகத்தின் உயர்வைக் காணவேண்டும் என்பதற்காக அயராது உழைப்பவனே உண்மையான தகுதியுடைய மனிதன்.

அந்தத் தகுதிக்குள்ளேயே அவனின் தரம், குணம், திடம் என்ற மூன்றும் முழுமையாக நிறைந்துள்ளது. முடிவுகளை எடுத்தல், மற்றவர்களுடன் கதைக்கும் தன்மைகள், பிரயோகிக்கும் வார்த்தைகளின் தரம், தொலைநோக்குப் பார்வை என அவனின் குணம் எத்தருணத்திலும் தளம்பாமல் மாறாதிருக்கும்.

அதேபோல அவனின் நிலை உயர்ந்தாலும் , தாழ்ந்தாலும் தாராள குணமான அன்பு, கருணை, பாசம், இரக்கம் , பொறுமை போன்ற தரமான குணங்களும் மாறாமல் திடமாகவே இருக்கும். தான் செய்யும் செயலில் ஒருபோதும் கவனக்குறைவு ஏற்படாமல் முன்நோக்கியபடியே தன் சமூகத்திற்கான பணிகளைச் செய்தபடி உயரிய நோக்கத்துடன் பயணித்துக்கொண்டிருப்பான்.

நம் வாழ்வில் நாம் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்ய நினைக்கலாம். ஆனால் அதை ஆரம்பித்து வைத்தலில் தான் அதன் முடிவும் வெற்றியும் இருக்கின்றது என்பதனை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

அந்தவகையில் மதிப்பிற்குரிய வைத்தியர் திரு. த. சத்தியமூர்த்தி அவர்கள் பல இன்னல்களுக்கு மத்தியிலும் அன்றும் எம் மக்களிற்காக கடைசிவரை சேவையாற்றினார் இன்றும் பல சேவைகளை ஆற்றிக்கொண்டு இருக்கின்றார்.

தற்பொழுதும் எம் சமூகத்தின் எதிர்கால நன்மைகளிற்கென பல திட்டங்களைத் தொலைநோக்குச் சிந்தனையுடன் ஆரம்பித்து வைத்து வருங்காலம் என்கின்ற ஆழகிய விடியலுக்காக பாறையைச் செதுக்கும் சிற்பியாகவே அவர் இருக்கின்றார்.

அப்படிப்பட்ட அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு மாமனிதரே வைத்தியர் திரு. த. சத்தியமூர்த்தி அவர்கள் ஆவார்.

கடந்த காலங்கள் முதல் இன்றுவரை எமது மக்களிற்கான பணிகளில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளையும் அர்ப்பணிப்புகளையும் ஒருபோதும் எம் மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

எதிர்காலச் சமூகத்தின் உயர்ச்சியை மேம்படுத்துவதே அவரின் ஓயாத உழைப்பாக இப்பொழுதும் இருக்கின்றது. எப்பொழுதும் அவர் தன் பணிகளில் இருந்து நேர்மை தவறாமல் இருப்பார் என்பதனை நான் அவருடன் பயணித்த காலங்களில் உணர்ந்துகொண்டேன்.

அப்படியே இப்பொழுதும் இருக்கின்றார் எனத் திடமாக நம்புகின்றேன்.

இப்படிப்பட்ட ஒரு உன்னதமான மனிதரை நாம் எம் வாழ்நாளில் கிடைக்கப் பெற்றோம் என்பதற்காக நம் பெருமைப்பட வேண்டும்.

– நன்றி 🙏🏻 சாள்ஸ் –