கண்ணதாசன்..
வாழ்வின் எந்நிலையிலும் என்னுடன் வரும் பாட்டுக்காரன்..
காடைசி வரை யாரோ என்று பாடியே கடைசி வரை வரக்கூடியவர்..
திரைப்பாத்திரம் எதுவானாலும் அப்பாத்திரத்தில் தன்னை நிரப்பக் கூடிய அனுபவஸ்த்தன்..
இந்தப்பாடலும்தான்..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)
கண்ணதாசன் குடிகாரன்.. பெண்பித்தன் என்றெல்லாம் பேச்சுண்டு.. திரையில் நாயகன் பாடும் பாடலாக இருந்தாலும், உண்மையில் இப்பாடலின் நாயகன் கவியரசரே!
அந்தக்காலத்தில் கோப்பையில் மையூற்றி மயிலிறகு கொண்டு எழுதும் வழக்கம் உண்டு. கவிநாயகன் அதையே முதலிரு வரிகளில் புதைத்து வைத்தாலும் மது, மாது சகவாசனாக இருக்கும் கதாநாயகனுக்கும் பொருந்தி வருகிறது.
அடுத்த பாய்ச்சலில் கவியரசு தன்னையும் நடிப்பரசு சிவாஜியையும் படநாயகனையும் பொதித்து வைத்த ஆய்தமாக பாடலைப் பின்னி இருக்கார்.
காவியத்தாயின் இளையமகன்.. சிவாஜியை மிஞ்சவும் ஆளில்லை.. கண்ணதாசனை மிஞ்சவும் ஆளில்லை.. என்ன ஒரு தீர்க்கதரிசனம்..