கள்ளிப்பூக்கள்.

ஐவகை நிலங்களை “ஐவவகைப் பூக்களின்” பெயரால் அழைத்த பழந்தமிழன் ஞானம் ஞாலத்தில் பெரியது.

(01.)குறிஞ்சி,
(02.)முல்லை,
(03.)மருதம்,
(04.)பாலை,
(05.)நெய்தல்.

நவீனம்சேர் தமிழனும் நாளிதழ்,மாதவிதழ் என பொத்தகங்களுக்கு “பூக்களின்” பெயர் சூட்டுகிறான்.

சிலர் பெண் பிள்ளைகளுக்கு “பூக்களின்” பெயர்களை அல்லது பூக்களின் பெயர்களை தழுவி பெயர் சூட்டி இன்றும் பெருமை கொள்கின்றனர்.

தமிழர்சேனையில் தூயதமிழில் பெயர் (இயக்கப்பெயர்) சூட்டவதென 1991 ஆம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போது மகனாரும் பூக்களின் பெயர் தாங்கிச் சுகந்தம் வீசினர்.

‘பூவினியன்,பூவேந்தன்,பூவண்ணன், மலரவன், மலரினியன் என்ற பெயர்கள் பூப்பூவாய் மலர்ந்து பாசறைகள், தங்கங்கள் எங்கனும் தமிழ் வாசத்தாலும் பூ வாசத்தாலும் சிறந்தோங்கின.

எங்கள் ஊர் வேலிகளை உயிர்ப்பூட்டிய கள்ளியும் அதன் வியத்தகு பூக்களும் வயவர்களின் மனங்களில் மலர்ந்து மலர்ந்து தேன் சுரக்கும் என்பது என் எண்ணம் அல்ல திண்ணம்.

“புஷ்பகம்” எனும் எங்கள் வீட்டை எல்லையிட்ட அழகிய வேலிச்செடிகள் என் பிஞ்சு நெஞ்சிலும் அன்று பூத்தன. அதுவேதான் இதை எழுதத் தூண்டியது.

ஆண்டவன் எனும் பெரும் கலைஞனின் கைவண்ணங்கள் பூக்களாகவும் பூங்குருவிகளாகவும்
கண்கவர், சிந்தைகவர் வண்ணங்களாக வெளிப்படுவதையே அனுதினமும் பார்த்துப் பார்த்து
வியந்து வருகிறோம்.

ஆனால்…

இரண்டின் சாயலையும் ஒன்றாக்கி
விந்தையென வியக்க வைக்கும்
அதியுன்னத படைப்புதான் கள்ளிப்பூக்கள்.

1 COMMENT

Comments are closed.