ஆங்கிலத் திரையுலக உச்ச நட்சத்திரங்களை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது…!!!
ஆனால்,,,
அமெரிக்கா சென்றபோது அந்த உச்ச நட்சத்திரங்களையே தன்னை தேடிவந்து பார்க்க வைத்தவர் தமிழ்த்திரை உலகின் தவப்புதல்வர் சிவாஜி கணேசன்.
சிவாஜியின் நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன் சேர்ந்து உவ(பு)கைப்படம் எடுத்துக்கொண்டு தங்கள்
வீடுகளுக்கே அழைத்துச் சென்று உபசரித்தார்கள் அந்த உச்ச நட்சத்திரங்கள்.
“காட்பாதர்” கதாநாயகன் மார்லன் பிராண்டோ, “பென் ஹர்” நாயகன், சார்லஸ் ஹெஸ்டன், “டென் காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய” யூல் பிரின்னர் உள்பட ஆங்கிலத் திரையுலகத்தின் (பஞ்ச பாண்டவர்களின்) நடுவில், எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ்த் திரை (கர்ணன்)..