வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலய வருடாந்தப் பொதுக்கூட்டம்.

428

வயாவிளான் தெற்கில் அமைந்து அடியார்க்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு வயாவிளான் மத்திய கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஆலயப் புனரமைப்பு, மக்களின் மீள் குடியேற்றம் போன்ற முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ள இப்பொதுக்கூட்டத்தில் இந்து கலாச்சார அமைச்சின் பிரதிநிதிகளும், அரசாங்க நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

வயாவிளான் தெற்குக் குடியேற்றப் பகுதிகள் விடுவிக்கப்பட்ட இந்நேரத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகின்ற இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் ஆலய பரிபாலன சபையினர்.