“பொங்கல்”இட்டோம்!!
“பொங்கல்”இட்டோம்!!
***********************************
“அமெரிக்கன் மா”எடுத்துக் – கோல
முற்றத்தில் கோலமிட்டோம்!
“செங்கல்” எடுத்து அஃகேனம்(ஃ) என
அடுக்கியே அடுப்பு வைத்தோம்!
“செங்கரும்பு”வெட்டி தோரணமும் கட்டியே
பச்சிலைப் பந்தலிட்டோம்!
“மாவிலை”எடுத்து மண் கலசத்தின் கழுத்தில் மாலை இட்டோம்!
தை மகளின் சுகந்தம் கை வீசி வரவே உவகை மேலிடவே “பொங்கல்”இட்டோம்!
சுற்றம் எல்லாம் முற்றத்தில் கூடியே உற்சாகம் பொங்கிடவே
“பொங்கல்”இட்டோம்!
“பொங்கல் பானை பொங்கிடவே “சீனவெடி சுட்டோம்”!
ஆம்!
அமெரிக்கா முதல் சீனா வரை
தமிழனின் “நன்றியறிதல்”பண்பு
சொன்னோம்!