ஆடி விதை..

தமிழர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகள் இரண்டு ஆகும்! 🤘

(01.)தைப்பொங்கல் – தைப்பிறப்பு
(02.)ஆடிக்கூழ் – ஆடிப்பிறப்பு

எங்கள் தானியக்களஞ்சியத்தில் தானியம் (நெல்லு/வரகு) நிரம்பும் போது பொங்குவோம்!

எங்கள் தானியக்களஞ்சியத்தில் தானியம் (நெல்லு/வரகு) குறையத்தொடங்கும் போது…

அதை எச்சரிக்கும் முகமாக சிறிதளவு அரிசிமாவோ இல்லை அரிசியோ பானையில் இட்டு கூழ் காச்சுவோம்!

ஆம், அடுத்த மாதம் ஆலயங்கள் திருவிழாக் காணும் ஆவணி மாதம்!

எச்சரிக்கை தந்த ஆடிக்கூழுடனும் ஆலயங்களில் அருளாட்சி புரியும் இறை ஆசியுடன்,

ஆவணி மாத புழுதி விதைப்பும் தொடங்கிவிடும்!

இதை விட,…

01)நவராத்திரி
02)கும்பத்துமால்
02)திருவிழா
உ+ம்: கப்பல் திருவிழா(வடமராட்சி)
வேட்டை திருவிழா(வன்னி)
03)மடிப்பிச்சை
04)கோயில் மடை
05)தைபொங்கல்
06)சித்திரைக்கஞ்சி

“இவையனைத்தும் சொல்லும் வாழ்வியல் தத்துவங்களை மிஞ்ச உலகில் வேறேதும் உண்டா என்று எனக்குத் தோன்றவில்லை” என நண்பர் நடேசன் திரு அவர்கள் உரைத்ததும் என் நெஞ்சில் கன்னலென இனிக்கின்றன.

ஆம்,

எங்கள் வாழ்வியலை, பண்பாட்டை எண்ணும் போது எப்போதுமே பெருமைதான்!👏❤️