உதிர் காலம்..

534

முன்பொரு பொழுது எழுதிய கவிதையும்..
அக்கவிதைக்கு தமிழ்ச்செல்வி சாம்பவி அளித்த பதில் கவிதையும்..
இப்படி லாவணிக் அகவிதைகளோடு வாழ்ந்ததொரு காலம்..

சுள்ளியால் கட்டிய கூடு
வெறுமையாகக் கிடந்தது
மொட்டை மர உச்சியில்..!!

அண்ணாந்து பார்த்த
தெருவோரச் சிறுவனின்
கண்களில் துளிர்த்தது நீர்.

 

சாம்பவியின் பதில் கவிதை…

உதிர் காலமாய்
உலகப் பொருளாதாராம்..
வல்லரசும் வாயடைத்துப்
போயிருக்க*
கண்ணீர் எதற்குத் தோழா..
காலம் வந்திருக்கு வாடா…

கற்கும் தருணமிது…
உலகிற்கும்
கற்பிக்கும் தருணமிது…

ஊழிக்காலத்திலும்
காலூன்றிக் காட்டு
கலாமின் கனவுக்கு
உருக்கொடு…..

மருட்சியெதற்கு
கண்ணில்..
மார்க்கமிருக்கு
உன்னில்..

ஊன்றியது
விருட்சமாகும்
தெருட்சியால்
உலகையே
ஆட்சி செய்யும்… !!!!