பல் மருத்துவர் சுதர்சன்

அடிவயிற்றில் சுதந்திரப் பசியுடன்
திரிந்த சுந்தரனே!

அன்புக்கோர் எல்லை வகுக்காத
அன்பாளனே – உனை

அந்தோனியார் கோயிலடியிலும்
தேடுகின்றோம்!

ஆஞ்சிநேயர் கோயில் மூலையிலும்
தேடுகின்றோம்!

அந்தரித்த வாழ்வினிலும்
தேடுகின்றோம்! – உனை

அன்னை தேசத்தின் இடிவிழ்ந்த இடுக்குகளிலும் தேடுகின்றோம்!

அந்நிய நாட்டின் அடுக்கு மாடிகளிலும் தேடுகின்றோம்!

அந்திப் பொழுதினிலும் அசந்திடாமல்
தேடுகின்றோம்! – நின்

அன்பு முகம்தனை அனுதினமும்
தேடுகின்றோம் சுதர்சனே!

ஐய்யனே விரைந்து வாடா!🙏