தொன்மைக் காலத்தில் புலவர்கள் கவிச்சமர் புரிந்தனர் என்று கற்றிருக்கின்றோம்; வியப்புற்றிருக்கின்றோம். அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டாத குறையை பிறிதொரு தளத்தில் இடம்பெற்ற கவிச்சதிர் ஆட்டம் தீர்த்தது. யான் பெற்ற இன்பம் மற்றோரும் பெற..
கவியே தான்
கவிழ்ந்தாலும் கமழ்ந்தாலும்
கவி கவிதான்… !
கரும்பில்
அடிக் கரும்பென்ன
நுனிக்கரும்பென்ன
பாகம் பார்த்து ருசிக்க
பட்டணத்து பட்டினத்தாரா
யாம்… !
பட்டு இனத்தார் தான்
மெல்ல மெல்ல
இழைபின்னி
கூடுகட்டும்
பட்டினத்தார்தாம்
பட்டும் படாமல்
இருந்தாலும்
பட்டு பட்டு தான்
பட்டுப் போனோமே…
பட்டிலென்ன பகட்டு…. !
ஒரு வேளை பசியாற
படும் பாடு பெரும்பாடு….!!
ஒருவேளை ….
ஒரு வேலை கிடைத்தால்
தீர்ந்திடுமோ ….
எம்பாடு… !
——————————
குறிப்பு – விளக்கம் தேவைப்பட்டால் தரத் தயாராக உள்ளேன்.