வாழை இலைத் தத்துவங்கள்

தலை வாழை இலை போட்டுச் சாப்பிடும்போது பலருக்கு ஏற்படும் சந்தேகம் இலையை எப்படிப் போடறது என்பதுதான்,

நுனி இலை இடது கை பக்கமா வருகிற மாதிரி போடணும் என்று சொல்லி மேதாவியா ஒரு பெரிய புன்னகையை காட்டுவாங்க…

சரி அதுக்கு மேல இதில என்ன இருக்கு என்று கேட்டா…

ஹி ஹி வேற என்ன இருக்குன்னு ஹிளிப்பாங்க. சரிங்க ஏன் நுனி இலை இடது பக்கம் என்றால் நூத்தில் ஒருவர் தான் வலது கையால் பிசைந்து சாப்பிடறதால வலது பக்கம் அதிக இடம் தேவைன்னு சொல்வாங்க.

அதுசரி எதை எதை எங்கே வைக்கிறோம் அப்படின்னு எதாவது வரைமுறை இருக்கா?

இருக்கே…

நூறு பேர் கிட்ட போய் என் இடது பக்கம் நுனி இலை வரணும் என்று கேட்டால்..

அந்த நூறு பேரில் ஒருத்தர் மட்டுமே கீழ்கண்ட பதிலைச் சொல்லுவார்.

பிசைஞ்சு சாப்பிட வசதிக்காக.. நாம வலது கையால் சாப்பிடுகிறோம். அதனால் நாம் சாதத்தை பிசைவது வலதுபக்கம். அதனால் வலது பக்கம் அகலமாக வருவது மாதிரி வாழை இலையை போடுகிறோம்

அப்பளம் தவிர ஓரளவு சரியாக அடுக்கப் பட்ட இலை

 

வலது பக்கம் கீழ்பகுதி சாதம் இருக்கும். சாப்பிட்டு பிடிக்காததை அப்படியே இடது பக்கம் ஷிப்ட் பண்ணிடலாம்.
மேல்பக்கம் வலதுபுறமிருந்து நாம் சாப்பிட வேண்டிய வரிசையில் பக்க உணவு வகைகள் உண்டு.

உணவுடன் முதலில் சாப்பிட வேண்டியது தொகையல் / சட்னி.போன்றவை.
இனிப்பு முதலில் சாப்பிட வேண்டும் என்றால் இடப்பாகத்தில் கீழேயும், கடைசியாக சாப்பிடுவது என்றால் பொறியலுக்கு அடுத்ததாகவும் இடம் பிடிக்கும். அப்பளம் பொரியலின் அருகிலேயே இருக்கும்.

அடுத்து கடைசியாக ஊறுகாய், மற்றும் உப்பு ஆகியவை வைக்கப் படும்.
வாழைப்பழம் இருந்தால் அது இடதுபக்கம் வைக்கப்படும்.
இந்த அமைப்பு, சாப்பிட வேண்டிய வரிசை முறை, எளிதில் அடைவது அப்புறம் சுவை கலக்காமல் உணவருந்துவது ஆகிய மூன்று விஷயங்களுக்கு உதவுகிறது.
இடதுபக்கம் நுனிவாழை இருப்பதால் தண்ணீரை அந்தப் பக்கம் வைப்பது நல்லது.

உப்பு என்பது எப்போதாவது உபயோகப்படுத்தும் ஒன்று. இதை வாழை இலையில் இடது பக்கம் மேல் பகுதியில் வைக்கணும்.

தவ்றான முறையில் வைக்கப்பட்ட இலை..
இந்த வரிசை கட்டாயமா என்றால் இல்லைதான். ஆனால் ஆய்வுப் பூர்வமாக வரிசை சரியாக இருந்தால் உணவு வீணாவது குறைகிறது.
சரி.. சரி.. இலையை எப்படி போடுறதுன்னும் ஏன் அப்படி போடனும்ன்னும் சொல்லிட்டீங்க….!! இப்ப சாப்பிட்டு முடிச்சதும் இலையை எப்படி மடிக்கனும்ன்னு சொல்லுங்களேன்…?!

இந்த இலையை மடிக்கறதுக்கும் உறவை முடிக்கறதுக்கும் சம்மந்தம் உள்ளதுபோல நம்ப தமிழ் சினிமாவுல காட்சிகள் வந்திருக்கே…?!

நல்ல விஷேசங்களில் இலையை சாப்பிட்டவர் மேலிருந்து கீழும், துன்ப நிகழ்ச்சிகளில் கீழிருந்து மேலும் மடிப்பாங்க…

ஏன்னு கேட்டதுக்கு ஒரு பெரியவர் சொன்னார், கீழிருந்து மேல மடிச்சா இந்த மாதிரி சாப்பாடு இனி வேணாம்னு அர்த்தமாம்.

மேலிருந்து கீழ்நோக்கி மடிச்சா, இன்னும் நிறைய முறை இதுமாதிரி சாப்பாடு வேணும்னு அர்த்தமாம்..
உறவை முடிக்கறதுன்னா இலையை மடிக்கக் கூடாது, பப்பரப்பான்னு அப்படியே சாப்பாட்டோட விட்டுட்டு ஓடணும் சுபி. (அதாவது சாப்பிடும் போது கோபம் வந்தால்) இல்லைன்னா சாப்பிடவே போகக்கூடாது.
விருந்தினரே இலையை எடுப்பது கூடாதுன்னு சொல்வாங்க. ஏன்னு கேட்டா அது ம்ரியாதை இல்லை. அப்படிம்பாங்க. அதுக்கு முக்கிய காரணம், எச்சில் கையால் இலையை எடுத்துகிட்டுப் போனா வழியில சிந்தும்.
அதுவுமில்லாம, கை கழுவுவது வேற இடம், இலையை எறிவது வேற இடம். அதனால எச்சில் கை யோட குறுக்க மறுக்க நடக்க வேணாமே.