இன்றைக்கு இறைத்தது காணும்

405

தெனாலி இராமன் ஊரில் வரட்சி நிலவியது. மழை தப்பியதால் போகம் விளையவில்லை. பயிர்கள் வாடி வீழும் நிலை. கொள்ளையும் அதிகமானது.

அன்று இரவு இராமன் தூங்கும் போது கொல்லைப் பக்கம் அரவம் கேட்டது. கள்வர் வந்துள்ளதை உணர்ந்த இராமன், மனைவியை தட்டி எழுப்பி “ஊரில் களவு கூடி விட்டது. வீட்டில் நகை வைத்திருப்பது ஆபத்து; கிணற்றில் போட்டி விட்டால் பாதுகாப்பாக இருக்கும்” என்று சொன்னான்.

கந்தலாடைகள் சிலதை பொதியாக்கி கிணற்றில் போட்டான். கள்வர்கள் மகிழ்ந்தனர். வீடு உடைக்காமல் கிணற்றிலிருந்து எடுக்கலாம் என்பது அவர்கள் எண்ணம்.

தண்ணியை இறைக்கத் தொடங்கினர். இராமன் மெல்ல மறு பக்கம் சென்று அவர்கள் இறைத்த தண்ணீரை தன் தோட்டத்துக்கு விட்டான்.

விடியும் பொழுதில் “இன்றைக்கு இறைத்தது போதும்” என்றான். திருடர்கள் திகைத்துத் தப்பி ஓடினர்.