உலகத் திரைக்கலையில் கான்ஸ் பட விழா (Cannes Film Festival) மதிப்புக்குரியதொன்று. கிட்டத்தட்ட நூற்றாண்டுத் தொன்மம் கொண்ட் இவ்விழாவின் 71 ஆவது கொண்டாட்டம் நடந்து வருகிறது.
இவ்விழாவில் போட்டி இல்லா (Hors Compétition) பிரிவில் பிரான்சின் பிரபல்யமான இயக்குனர் GillesLellouche அவர்களின் திரைப்படமான Le Grande Bain திரையிடப்படுகிறது.
இதிலென்ன சிறப்பு என்கின்றீர்களா? இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரங்களில் ஒன்றாக பிரான்சு வாழ் ஈழவன் தமிழ்ச்செல்வன் பாலசிங்கம் நடித்துள்ளார்.
அண்மைக்காலமாக பிரெஞ்சுப் படங்களில் தமிழர்களை நடிக்க வைப்பது தமிழ்க்கலைஞர்களுக்கான அங்கீகாரமாக நோக்கப்படுகிறது. அந்த வகையில் இது இன்னொரு சிறப்புச் செய்தி அல்லவா? மகிழ்வோம்.