மருத்துவக் கலைஞன் கெங்காதரன்

77

தொண்ணூற்றேழாம் ஆண்டெனெ நினைக்கின்றேன். முள்ளியவளையில் முதல் முதல் ஐயாவை காண்கிறேன்.

சத்தியசாயி ஆச்சிரமத்தில் ஓர் இசையரங்கு. “கெங்காதரன் டொக்ரர் புல்லாங்குழலாம்”.

புல்லாங்குழலை ஒரு அரங்க நிகழ்வாக அன்றுதான் முதலில் பார்க்கப்போகிறேன்.

பக்கவாத்தியக்கலைஞர்கள்
எல்லாம் வந்துவிட்டார்கள்.

அந்த எழிமையான மனிதன் சைக்கிளில் ஒரு பையில் மூன்று புல்லாங்குழல்களை கொண்டு வந்தார்.

ஒரு மருத்துவர் காரிலோ அல்லது வேறேதும் வாகனங்களிலோ வருவார் எனவே எதிர்பார்த்திருந்தேன்.

அந்தக்கம்பீரமான நடையுடன் வந்து அரங்கில் அமர்ந்தார்.

அரங்கு ஆரம்பமாயிற்று.

திகைப்புடனும், வியப்புடனும் வேணுகானத்தில்சொக்கிப்போனேன்.

கணீரென்று காதுகளில் பாய்ந்தது வேய்ங்குழலின் ஸ்வரங்கள். இன்னும் என்னிதயத்தைத் தொட்டது!

“ கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன் “ எனும் வீரமணிஐயரின் பாடல் .. மூன்று மணி நேரம் போனதேதெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை மருத்துவர் கெங்காதரன் என்ற கலைஞனின் பரம இரசிகன் நான்.

– அன்புக்கோன் –