எங்கள் காலத்து ஏகலைவன்

எங்கள் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ காவியமாகிய பின்னர் யான் எழுதிய கவிதையின் தலைப்பு இது.

ஏகலைவன் குருதட்சணைக்காய் கட்டைவிரலைக் கொடுத்தவன்.

எங்கள் ஏகலைவன் வருங்கால சந்ததிக்காய் கட்டைவிரலை களத்திடை கொடுத்தவன்.

கட்டைவிரலை கொடுத்துவிட்டு
கனகாலம் களப்பணி செய்தவன்.

அந்த ஏகலைவன் வில்வித்தையில் மட்டுமே வித்தகன்.

இந்த ஏகலை சொல்வித்தையிலும் வித்தகன்.

கவிதை, கட்டுரை வரைவது தொடக்கம்
பாடலாசிரியர், நடிகர் என பல்கலை வித்தகன்.

களப்பணிகளில் கடின பணியாகி வேவு நடவடிக்கையிலும் பின்னர் சேகரித்த தகவலை வைத்து வரைபடம் வரைவதிலும் வித்தகனாய் விளங்கினான்.

எனும் தொனிப்பொருளில் யான் யாத்திருந்த கவிதை தொலைந்துவிட்டது.

இந்தப் பதிவைப் பார்த்த போது சில வரிகள் என்னுள் துளிர்க்கின்றன.

முழுமையாக நினைவு மீட்டி பிறிதொரு பதிவில் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.

மனலாறு மண்ணில் பெரும்பணியாகிய வேவு அணித்தலைவனாய் முதன் முதலில் பூட்டோவைச் சந்தித்தேன்.

அன்று சந்தித்த பூட்டோ சாதனைகளின் நாயகனாக மாறி கட்டைவிரலை மட்டுமல்ல முழுமையாக தனை எமக்காய் தந்துவிட்டு விழிமூடிவிட்டான்.

வீரவணக்கம் பூட்டோ!