பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :4

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

ஏன்?

வண்டலூர் செல்கிறீர்கள். முற்றிலும் வேகமாக சுற்றிப்பார்க்க ஒரு மின்சார வண்டி இருக்கும். அதில் அமர்ந்தால் அது எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்லும். வேகமாகச் சுற்றிப் பார்க்கலாம்.

செல்வம் என்பது அதேபோல் அனைவரிடமும் செல்ல வேண்டிய ஒன்றாகும். செல்வம் அனைவரிடமும் செல்ல வேண்டுமானால் அதற்கு எளியவழி கொடுப்பவனிடத்தில் செல்வம் இருப்பதே ஆகும்.

அப்பொழுதே செல்வம் அனைவரையும் சென்றடைய வேண்டும். கஞ்சனிடம் செல்வம் மாட்டிக் கொள்வது சிறைபடுதலை போல. அதை விடுவிக்க மிகப் பெரிய சுதந்திரப் போரையே நடத்த வேண்டும்.

இறைக்க இறைக்க ஊறும் மணற்கேணி என வள்ளுவர் இன்னொரு குறளில் சொல்லுவார். அது போல் விருந்தோபுபவனிடத்தில் மேலும் மேலும் செல்வம் சேரும். இன்றும் பல கோவில்களில் தினந்தோறும் அன்னதானம் நடக்கிறது. அங்கு செல்வம் எப்படி வருகிறது? விரும்பி வருகிறது.

தாமரையில் அமர்ந்த செல்வத்தின் அதிபதி (தாமரை செல்வனும்தான்), விருந்தோம்பலில் மகிழ்பவர்கள்.