நாளை நமக்காய் விடியுமென நம்பிக்கையுடன் கரிகாலன் கண்மணிகளும்…

“கங்குல்”மெல்லக் கவிய
கள்ளுக்கடை தேடி
நடுத்தர வயதுடையோர்
அலை மோதிட,…மோதிட…

“கங்குல்”மெல்லக் கவிய
“தேங்கனி நீர்” சுவையுடன்
“மாங்கனி”ச் சுவையும் நாடி இளைஞர்
ஊருக்குள் உலாவிட,…உலாவிட

“கங்குல்”மெல்லக் கவிய
பூங்கனிச் சோலைகளில் சிலர் காதல் மொழி பேசி மகிழ்ந்திட,…மகிழ்ந்திட

 

“கங்குல்”மெல்லக் கவிய
கை கால் கழுவி
கடவுளை வணங்கி ஒரு கூட்டம் பொத்தகங்களை
புரட்டிடப் புரட்டிட!

“கங்குல்”மெல்ல கவியக் கவிய முகமெல்லாம் பச்சை கலந்த கரி நிறத்துடன் தமை உருமறைத்து உருமறைத்து!…

நாளை நமக்காய் விடியுமென நம்பிக்கையுடன் கரிகாலன் கண்மணிகளும் ஆயத்தமாகிய காதைகள் சொற்களுக்குள்
அடங்காது அடங்கிடாது!

ஆம்,

எம் செம்மண்ணில் முள்ளாய் இருந்த
எதிரிப் படைவீடுகளை
உளவு பார்க்க புறப்படுவர் உறங்காத கண்மணிகளாகிய வேவுப்புலிகள்!