கிரிக்கெட் பாடங்கள் : தோனியின் நிர்வாகவியல் – 7

428

ரிஸ்க் மேனேஜ்மெண்ட்: (இடர் மேலாண்மை)

இது இரு வகைப்படும். ஒன்று திட்டமிடப்பட்ட முன்னேற்பாடான மேலாண்மை

இன்னொன்று சமயங்களில் தோல்வி முகத்தை வெற்றிமுகமாக மாற்றுவதற்காக உடனுக்குடன் எடுக்கப்படும் துணிகர முயற்சிகள்.

முதலாம் வகையை முதலில் பார்ப்போம்.

20/20 உலகப் கோப்பைப் போட்டியே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

டை பிரேக்கர் வந்தால் என்ன செய்வது?

முதல் ஆறு ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தால் என்ன செய்வது?

யாராவது ஒரு பந்து வீச்சாளர் சோபிக்காமல் போனால் என்ன செய்வது?

யாருடைய பந்து வீச்சு எதிரணியில் கவனமாக ஆடப்பட வேண்டும்?

யாருடைய பந்து வீச்சில் துணிந்து அடித்து ஆடலாம்?

அடித்து ஆட யார்?

நின்று ஆட யார்?

எந்த சூழ்நிலையில் தான் ஆடி நம்பிக்கைத் தரவேண்டும்
என்ன செய்தால் எதிரணியின் நம்பிக்கைத் தளரும்?

ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இவை ஆராயப்பட்டு கடை பிடிக்கப் பட்டது அந்த போட்டி விமர்சனங்களையும் அதன் பின்னான தோனியின் பேட்டிகளையும் பார்த்தால் புரியும்.

போட்டிக்கு முன்னரே இந்த மைதானத்தில் 6 ஓவருக்கு இத்தனை ரன், 10 ஓவருக்கு இத்தனை ரன் 15 ஓவருக்கு இத்தனை ரன் 20 ஒவருக்கு இத்தனை ரன் என்ற தெளிவும்.. அது நடக்கா விட்டால் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகளும் தெளிவாக முன்னரே முடிவு செய்யப்பட்டது பேட்டிங் வரிசை மாற்றம், பந்து வீச்சு மாற்றங்களில் தெளிவாகத் தெரியும்.

ஐபிஎல் போட்டியில் ஹெய்டனும் ஹஸ்ஸியும் ஜேக்கப் ஓரமும் இருக்கும் பொழுது அனைத்து போட்டிகளையும் வென்றாக வேண்டும். அடுத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் வரும் வரை தோல்விகள்தான் எனத் தெரிந்து அந்த நான்கு போட்டிகளையும் வென்ற விதம்..

அடுத்த 6 போட்டிகளில் வரிசையாகத் தோற்றாலும் சென்னை அவ்வளவுதான் என்று யாராலும் தள்ள முடியாதபடி அணியைக் கட்டுக் கோப்பாக வைப்பது எப்படி என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். அந்தச் சமயத்தில் இளம் வீரர்களைச் சோதித்து வித்யூத் சிவராமகிருஷ்ணனைக் கண்டறிந்தது..

முத்தையா நித்னி ஆகியோர் பெரிதாக பயமுறுத்தா விட்டாலும் அவரவர்க்கென்று தனித்தனிப் பொறுப்புகள். முத்தையாவின் வேலை ரன்களைக் கட்டுப் படுத்துவது.

இப்படி

என்ன தடைகள் — அதை ஏற்படாமல் தடுக்க என்ன திட்டம்
முதல் திட்டம் சரிவராது என்பதை எப்போது தீர்மானிப்பது
அதற்கு என்ன மாற்றுத் திட்டம்?

இவை மூன்றும் தோனியிடம் திடமாக இருந்ததைக் காணலாம்.

இந்தக் கடைசி போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் திட்டம் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்களை ஒன்றரை நாட்களில் குவிப்பது.

கொஞ்சம் தடுமாற்றம் 441 ரன்கள்..

இரண்டாம் திட்டம் – இரண்டாம் நாள் முடிந்த வரை ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்துவது. இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன.

இப்பொழுது மாற்றுத் திட்டம் செயல்படுத்தப் பட்டது. ரன் வேகத்தை மட்டுப் படுத்துவது. இதனால் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அணி அடித்து ஆடும் முயற்சியில் விக்கெட்டுகளை இழக்கும் என்றக் கணிப்பு. இது தவறவில்லை.

நான்காம் நாள் இந்தியாவின் இலக்கு 360 ரன்களை ஆஸ்திரேலியாவிற்கு தரவேண்டும். அதிலும் சறுக்கல். ஆனாலும் தோனியின் கணிப்புப் படி பாண்டிங் தன்னுடைய பந்து வீச்சாளர்களை உபயோகிக்கத் தடுமாறியதில் ஹர்பஜனின் உதவியுடன் 382 இலக்காக அமைந்தது.

முதல் நாளே தோனி சொல்லிவிட்டார். பந்து பழையதானால் போதும். அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடலாம்.

உணவு இடைவேளை வரை 23 ஓவர்களே வீசப்பட்டன. முதல் 1 மணி நேரத்தில் 10 ஓவர்கள்தான் வீசப்பட்டன, தோனி பாண்டிங் போல பரபரக்கவில்லை. பந்தின் வித்தைகளை மட்டுமே கவனித்தார்,. எது சுழல்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வருவதற்கு ஏற்ற நேரம். இடையில் மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. 4 கேட்சுகள் தவற விடப்பட்டன. வர்ணனையாளர்களும் வேலை இல்லாத பழைய கேப்டன்களும் பாண்டிங்கை விட மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். பாண்டிங் போல தண்டனைக்குப் பயப்பட வில்லை.

பந்து தேவையான அளவிற்கு பழையதானதும் காட்சி மாறியது. சுழற்சியில் ஆஸ்திரேலியா சுருண்டது.

இலக்குகள் – இடர்கள் – திட்டம் – திட்டம் கை மீறிப் போவதை எப்படி அறிவது – மறுதிட்டம் – அதைச் செயல்படுத்த வேண்டிய நேரம், சூழ்நிலை என்ன?

இவை அனைத்தும் கொண்ட ஒரு முழுமையான ரிஸ்க் மேனேஜ்மெண்ட் தோனியின் போட்டிக்கு முன்பான பின்பான பேட்டிகளை தொடர்ச்சியாகப் படித்தால் இது புரியும்.

இரண்டாவது வகை துணிகர முயற்சி. இது இக்கட்டான நிலைகளில் எடுப்பது, இதற்கு உதாரணம் தேடி அலைய வேண்டியதில்லை.,

இறுதி ஓவர்கள்… இவை போதும் துணிவுள்ளவனை மட்டுமே வெற்றித் திருமகள் மாலை இடுகிறாள்..

முற்றும்