மேன்மக்கள்

பாய் ஃபாங்லி (Bali Fangli) என்பவர் சீனாவில் வாழும் ரிக்சா ஓட்டுனர். இவர் தனது எழுபத்து நான்காவது வயதில் ரிக்சா ஓட்டுவதை நிறுத்தி இறுதிக் காலத்தைக் கழிப்பதற்காக தனது சொந்த ஊரிற்குச் சென்றார். அங்கு சிறுவர்கள் வயலில் வேலை செய்வதைக் கண்டார்.

அவர்கள் ஏன் வயலில் வேலை
செய்கிறார்கள்என்று விசாரித்தபோது கல்வி கற்பதற்கு பணம் இல்லை என்று கூறினார்கள். இதனால் வருத்தம் அடைந்த பாய் ஃபாங்லி தன்னிடம் உள்ள ஐயாயிரம் யான்களை (118000 /-)ரூபாய் வழங்கினார். பின் அவர்களுக்கு உதவுவதற்காக மீண்டும் டியான்ஜின் (Tianjin) ற்கு ரிக்சா ஓட்டுவதற்காகச் சென்றார்.

இவ்வாறு சிறிது சிறிதாகச் சேகரித்த இவர் 2001 ஆம் ஆண்டு தனது 90ஆவது வயதில் ரிக்சாவில் டியான்ஜின் யாஓஹீவா (Tianjin Yaohua) என்ற பாடசாலைக்குச் சென்றுதனது இறுதிச் சேமிப்பைச் சேர்த்தார். தன்னால் இதற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை என்று கூறிவிட்டு சென்றார். இவர் 20 வருடம் உழைத்து மொத்தமாக 3,50,000 யான்களை ( 82 இலட்சம் ரூபாய் ) தானமாக அளித்துள்ளார். 300 மாணவர்கள் இவருடைய உழைப்பின் உதவியால் கல்வி பயின்றனர்.

இப்படி குழந்தைகள் கல்வி கற்க உழைத்த இவர் டியான்ஜினில் புகையிரத நிலையத்திற்கு அருகில் சிறு வீட்டில் வசித்து ரிக்சா ஓட்டினார். இவர் சில வேலைகளில் 24 மணி நேரமும் தூங்காமல் ஓட்டுவது உண்டு. இவர் எளிய உணவுகளையே உண்டார். மக்களால் குப்பையில் இடப்பட்ட உடைகளையே அணிந்தார்.