ரசத்தில் நவரசம்

(நவ)ரசம் ..
கண்ணே!
உன் கைபட்டு
கரைந்ததில்
ஆனந்தமாய்
கண்ணீர் விட்டதோ புளி..




ரசத்தில்
உப்பு கொஞ்சம் தூக்கல்தான்

 

கண்ணே! உன் கைபட்டு —— காதல்
கரைந்ததில் ——- கருணை
ஆனந்தமாய் கண்ணீர் விட்டதோ புளி..—– மகிழ்ச்சி


ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கல்தான் — ஹாஸ்யம் (நகைச்சுவை)

இதை சொல்லும் போது எனக்கு —— வீரம்
கேட்டவுடன் மனைவிக்கு ——- குழப்பம்

சிறிது நேரம் கழித்து —- கோபம்
என் மனைவியின் கோபம் கண்டு எனக்கு —— பயம்
என் மனைவி பாத்திர வீசல் —– ரௌத்திரம்
கடைசியில் என் நிலை ——- சோகம்….

ரசத்தில் நவ ரசம் —- நிஜம் தானே…