என் அன்பார்ந்த வயாவிளான் மக்களுக்கு வணக்கம்.
வயவைத் தாய்க்கு ஒரு வாழ்த்து பாடல் இல்லையே எனும் கவலை என்னை துடியாய் துடிக்க விட்டது. அதை போக்கும் வண்ணம் தாய்க்கு ஒரு பாமாலை சூடியுள்ளேன்.
வயாவிளான் வாழ்க வாழ்க
வயவைத் தாயே வாழ்க வாழ்க
வயாவிளான் மக்கள் வாழ்க வாழ்க
செம்மண் கொண்ட தாயே வாழ்க வாழ்க
உன் பிள்ளைகள் செழிப்புற செம்மண் தந்த தாயே வாழ்க வாழ்க
செம்மண்ணில் இடடதெல்லாம் செழிப்புற தந்த தாயே வாழ்க வாழ்க
உன் பிள்ளைகள் இன்புற்று வாழ
உன் மடி தந்த தாயே வாழ்க வாழ்க
அயலவர்கள் இளைப்பாற உன் மடியில் இடம் கொடுத்த தாயே வாழ்க வாழ்க
என்ன வளம் இல்லையம்மா உன்னிடத்தில் தாயே வாழ்க வாழ்க
எம் மதமும், எவ்வினமும் எம் மொழியும்.சமமெனக் கொண்ட தாயே வாழ்க வாழ்க
அயலவர்கள் வியக்கும் வண்ணம் கம்பிரமாய் கோலோச்சும் தாயே வாழ்க வாழ்க
உன் பிள்ளைகள் இதயத்தில் குடிகொண்ட தாயே வாழ்க வாழ்க
வயவை எனப் பெயரெடுத்த தாயே வாழ்க வாழ்க
வயாவிளான் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க
உங்கள் அன்புதான் என்னை இதை எழுத வைத்தது. உறுதியாக ஊக்குவிப்பீர்கள் எனஉறுதியாக நம்புகிறேன்
அன்புடன்
-மாரிட்டி மண்ணின்மைந்தன்
வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்