அற்புதப் பெண்மணி – 01

இங்கிலாந்தில் பிறந்து விவேகானந்தரின் கொள்கைகளால் கவரப்பட்டு, இந்தியாவில் பெருஞ்சேவை ஆற்றிய மங்கையர் மாமணி.

பாதிரியார் சாமுவேல் நோபிள் மேரி இசபெல் நோபிள் தம்பதியரின் புதல்வியாக வடக்கு அயர்லாந்தில் டங்கண்ணான் என்ற சிறிய நகரில் 1867 –10–28 இல் மார்கரெட் எலிசபெத் நோபிள் அவதரித்தார். இவர் தம்பி தங்கையுடன் வளர்ந்த காலத்தில் பத்தாவது வயதில் தகப்பனாரை இழந்தார்.

தேவாலயம் நடாத்திய பள்ளியில் படித்த இவர் பதினேழு வயதில் ஆசிரியர் பணியில் ஈடு பட்டார். தனது திறமையால் விம்பிள்டன் நகரில் பள்ளி ஒன்றைத் தொடக்கி தானே உருவாக்கிய வழிமுறைகளில் மாணவர்களுக்கு கற்பித்தார்.

இவர் பள்ளிப் படிப்பையும் தாண்டி இலக்கியம் , இசை , நுண்கலைகள் தொழில் நுட்பம் போன்றவற்றையும் கற்றார்; கற்பித்தார். இவரிடம் துணிவு, விவேகம், அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, கருணை எல்லாம் நிறைந்திருந்தது. கதைகள், கட்டுரைகள் எழுதுவார். பணிகள் செய்வதில் வல்லவர். இள வயதில் பலபரிசில்களையும், புகழையும் தனதாக்கிக் கொண்ட பெருமைககுரியவர்.

காலம் ஓடிக்கொண்டிருந்தது. விவேகானந்தர் சர்வமதநிகழ்வை முடித்து விட்டு பிரித்தானியாவுக்குச் சென்று சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில் கலந்து கொண்ட மார்கரெட் அவரின் சொற்பொழிவை தவற விடுவது இல்லை. அத்துடன் சந்தேகங்களை தெளிவுபடுத்தினார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை பிடித்து விட்டது. பணி செய்து கிடப்பதே தன் பணி என்ற முடிவை எடுத்தார். அவரின் விருப்பம் விவேகானந்தருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்நியர் ஆட்சியின் கீழ் அடிமையாகவும் கலாச்சார விதியின் கட்டுப்பாட்டின் கீழும் இருளில் மூழ்கியிருக்கும் பெண்களின் வாழ்வு மேம்பாட்டு க்கு இப் பெண்மணி யின் திறமை திறம்பட செய்யும் என நினைத்து அவரை மகிழ்ச்சியுடன் 1898–01–28 இல் கொல்கத்தாவிற்கு அழைத்தார்.

 

-தொடரும்-

எழுத்தாக்கம்

மலர் கணேசலிங்கம்