‘ஜெசுபிரானின் பாடுகளை’ப்
படித்துக் கலங்கினோம். – பின்
எங்கள் “பாடுகளை”யும்
பெரு நம்பிக்கையுடன்
சுமந்து களைத்தோம் – இன்று
“கடற்பாடுகளை”க்கூட
காக்க முடியாமல்
எம் “பாடுகள்” நீள்கின்றன.
கடப்’பாடுகளை’ மறந்த வாக்கு வேட்டையர்
“பாடுகள்” எல்லாமே ஹொந்தாய்!
குறிப்பு: கடலை அண்டி உள்ள தரையே கடற்பாடுகள் ஆகும்.
இவை தந்தை வழி முதுசமாக ஆண் வாரிசுகள் மூலம் சந்ததி சந்ததியாகக் கடத்தப்படும்.
அண்மையில் தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களால் தமிழர்களின் வாடிகள் பறிக்கப்பட்ட போது எழுந்த உள்ளக் கிளர்ச்சியில் கருக்கொண்ட வரி(லி)கள் இவை..