பீகாரில் தவத்பூர் என்ற ஊரில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவரை எல்லோரும் கை விட்டு விட்டார்கள். அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையறையில் முடங்கிக் கிடந்தார்.
இதை இராமகிருஸ்ணரின் துறவிச் சீடரான சுவாமி அகண்டானந்தர் அறிந்து வீட்டிற்கு விரைந்தார்.
வீட்டிற்குள் நுழைய முடியாதளவிற்கு துர்நாற்றம் வீசியது. சுவாமி அகண்டானந்தர் இரு தொண்டர்களின் உதவியுடன் அறையை சுத்தம் செய்து மருத்துவ உதவி உணவு அளித்தார்.
சில நாட்களில் அம்மையார் நல்ல ஆரோக்கியம் பெற்றார். அந்த மூதாட்டி சுவாமியிடம் நீ யார் போன பிறவியில் மகனாக இருந்திருக்க வேண்டும் என்று மனம் நெகிழ்ந்து பேசினார்.
அதற்கு சுவாமி அகண்டானந்தர் இந்தப் பிறவியிலும் நான் உங்களுக்கு மகன்தான் நீங்கள் எனக்கு தாய் தான் என்றார்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்.