சுக்கிரன் – வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க 6

508

2004 – ல் எடுக்கப்பட்ட சுக்கிரன் படங்கள்

சுக்கிரன் – பூமிக்கு இடையிலான தொலைவுதான் கோள்களுக்கு இடையேயான தொலைவுகளில் மிகச் சிறியதாகும், சுக்கிரன் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். கோள்களின் இயக்க விதிகளின் படி ஏன் நீள் வட்டமாக இல்லை என யோசிக்க வேண்டும். அதற்கும் அதன் சுழற்சி திசை மாறுபாடாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது.. சந்திரன் பூமி உடைந்து தோன்றியது என்பதற்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கலாம்.

சுக்கிரன் மீது எதுவோ மோதியதில் உண்டான சந்திரன், சுக்கிரனின் சுழற்சி அந்த மோதலில் குறைந்து விட்டதால் மறுபடி சுக்கிரனிலேயே விழுந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதனால் சுக்கிரன் பூமிக்கு அருகில் வந்து பூமியின் ஈர்ப்பு விசையினால் பூமியுடன் ஒத்திசைவு கொண்டு இருக்கலாம்.

இதுவரை சுக்கிரனுக்கு வெளியில் இருந்து பார்த்த நாம் இப்போது சுக்கிரனில் இறங்கிப் பார்ப்போம். வெளியே இத்தனைக் கூல் தகவல்களை கொண்டிருக்கும் சுக்கிரன் நிஜத்தில் ஹாட் ஹாட் ஹாட் தான்..

சுக்கிரனின் வளிமண்டலத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கார்பன் டை ஆக்சைடு தான். அப்புறம் நைட்ரஜன் 3.5 சதவிகிதம் தான்.

சுக்கிரனில் பல எரிமலைகள் உண்டு. சுக்கிரனில் நீர் நிழல் பகுதிகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல்கள் இல்லாவிட்டாலும் பள்ளம், மற்றும் பீடபூமிப் பகுதிகள் உண்டு. இந்த பீடபூமிப் பகுதிகளை கண்டங்கள் என்று கொண்டால்.. சுக்கிரனில் இரண்டு கண்டங்கள் உண்டு.

கீழே உள்ள படத்தில் உள்ள மஞ்சள் பகுதிகள் உயர்ந்த பகுதிகள் ஆகும்.

சுக்கிரனின் உட்பகுதியும் கரு, மேண்டில் மற்றும் மேலோடு போன்றவை கொண்டுள்ளது. ஆனால் கார்பன் டை ஆக்சைடு வெப்பத்தை வெளிவிடாமல் தடுப்பதால் பூமியைப் போன்று டெக்டானிக் பிளேட்டுகள் அமையவில்லை எனக் கருதப் படுகிறது.

சுக்கிரன் மிக மெதுவாகச் சுழல்வதால் காந்தப் புலம் உண்டாவது கிடையாது.

சுக்கிரனில் 100 கிலோமீட்டர் பரப்பளவிற்கு மேலான இராட்சச எரிமலைகள் 167 இருக்கின்றன எனக் கணக்கிட்டு இருக்கிறார்கள்..

சுக்கிரனில் இறங்கிய இரஷ்ய விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்ட படம் கீழே..

எனக்கென்னவோ செவ்வாயை விட சுக்கிரன் பதுகாப்பா இருக்கும்னு தோணுது..

1. சுக்கிரனோட சுழற்சி வேகத்தை அதிகரிக்கணும்.. (சுக்கிரனின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மோதி வேகத்தை அதிகரிக்கலாம்..  .. இதனால் 54 நாட்கள் நீடிக்கும் பகல் இரவு அளவு சுருங்கும்..

2. சுழற்சி வேகம் அதிகரித்தால் காந்தப் புலம் உண்டாகும். இதனால் கதிரியக்க பாதிப்பு குறையும்.

3. கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜன் – கார்பன் என பிரிக்க தேவையான வேடி வினையைத் தூண்ட வேண்டும்..நாலைஞ்சு வால் நட்சத்திரங்களை சுக்கிரன் மேல் விழவைத்தால் கடல் தோன்றி விடும். ஷூ மேக்கர் – லெவியை தள்ளி விட்டுருவோம்.

இதை மட்டும் செஞ்சோம்னா சுக்கிரனை பிளாட் போட்டு வித்துட்டு ஆயுசு பூரா ஜாலியா இருக்கலாம். என்ன சொல்றீங்க?