வயாவிளான் பற்றி விக்கிப்பீடியா

161

இது வயாவிளான் பற்றி விக்கிபீடியாவில் உள்ள சிறு குறிப்பு. இதில் தவறு இருக்கலாம். இன்னும் தகவல்கள் சேர்க்கலாம்… அதை செய்ய ஒரு அணில் முயற்சி. வயாவிளானும் நானும் என்ற தலைப்பில் உங்கள் மன ஓட்டங்ககளை வயவனுக்கு அனுப்புங்கள்.

தற்போது வயாவிளானின் மீளெழுச்சிக்காக அமைப்புகளும், தனிநபர் முனைப்புகளும் தோற்றம் பெற்று மகிழ்வைத் தருகின்றன. அவை தொடர்பான தகவல்கள், அமைப்பு ரீதியான செய்திக்குறிப்புகள், இன்ன பிற ஆக்கங்கள் என்பவற்றையும் வயவனில் பிரசுரிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி

vayavans@gmail.com

 

வயாவிளான் (Vayavilan) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு கிராமம். வலிகாமம் வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த இக்கிராமம் வயாவிளான் கிழக்கு (J/244), வயாவிளான் மேற்கு (J/245) என்னும் இரு கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. இக்கிராமம் இலங்கை பலாலி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்கியதனால் இக்கிராம மக்களும் முழுமையாக வேறிடங்களுக்கு இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி வயாவிளான் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பகுதியில் மக்கள் எவரும் இல்லை என்று குறிக்கப்பட்டுள்ளது.[1] 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி வயாவிளான் கிழக்கில் 1395 பேரும், வயாவிளான் மேற்கில் 116 பேரும் உள்ளனர்.

வயாவிளான் கிராமம் பலாலி வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. கிழக்கே அச்சுவேலி, வடக்கே பலாலி, மேற்கே குரும்பசிட்டி, தெற்கே வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. அத்துடன் அச்சுவேலி-அராலி பிரதான வீதியும் வயாவிளான் கிராமத்தின் வடக்கு எல்லையாக அமைகிறது. பிறிதொரு வீதியான பலாலி வீதி வடக்கு-தெற்காக வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முன்பாக வயாவிளான் கிராமத்தை ஊடறுத்து செல்கிறது. பலாலி வீதியும், அச்சுவேலி-அராலி வீதியும் சந்திக்கும் இடம் வயாவிளான் சந்தியாகக் கொள்ளப்படுகிறது

 

வணக்கத் தலங்கள்

வயாவிளான் மேற்கு
வயாவிளான் கிழக்கு
  • அந்தோனியார் கோவில்
  • உத்தரியமாதா கோவில்
  • முத்துமாரி அம்மன் ஆலயம்
  • அபிராமி ஆலயம்