பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 9
தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
தானம் என்பது ஒருவன் இன்னொருவனுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் நன்மை.
தவம் என்பது ஒருவன் தன் சுய நன்மைக்காகச் செய்வது.
இந்த வியக்கத்தக்க உலகத்தில் இரண்டுமே இல்லாமல் போய்விடும். எப்பொழுது? வானம் கொடுக்காத பொழுது.
வானம் கொடுக்காத பொழுது பொதுநலமுமில்லை சுயநலமுமில்லை. ஏன், நலமேயில்லை அல்லவா? அதனால்தான்.