செந்தமிழில் அம்பாறை என்பதன் பொருள் “அழகியபாறை” என்பதாகும். தமிழர் தாய் நிலத்தில் எழில்மிகு சிறுமலைகள் அல்லது பெரும் பாறைகள்கொண்ட மாவட்டம் அம்பாறை ஆகும்.
நாங்கள் அம்பாறையில் இருந்த நேரம் ஒருநாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழிக்கம்பை என்ற இடத்தில் நடமாடும் மருத்துவ சேவை செய்தோம்(Mobile Medical Service).
அழிக்கம்பை அழகிய கிராமம் ஆனால் மிகவும் வறியமக்கள் உள்ள கிராமம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட சில செங்கல் வீடுகள் அங்கே நிமிர்ந்து எழில்கோலம் இட்டு நின்றன.
(1.) சாத்திரஞ்சொல்லுதல்,
(2.) பாம்பாட்டுதல்,
(3.)காட்டில் வேட்டையாடுதல் ஆகியன அவ்வூர் மக்களின் பிரதான தொழில்கள்.
தமிழைத் தவிர இன்னொரு திராவிட மொழியையும் தங்களது பேச்சு மொழியாகக் கொண்டிருந்தார்கள். சாத்திரம் சொல்லும் எங்களின் அந்த சோதரர்கள், கண்டியை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள், தாய்மொழி தெலுங்கு என்றும் அறியப்படுகிறது (ஆய்வுக்குட்பட்டது) .
அவர்கள் தங்களின் சிறிய சிறிய மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாயினும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது என்று கவலைப்பட்டார்கள். எனவே அங்குள்ள பக்கத்துக் கிராமமான “தொட்டம” என்ற கிராமத்தில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கும் இவர்களுக்குமான தூரத்தைக் கணிப்பதற்காகச் சென்றோம்.
உண்மையில் அது கிராமம் என்ற கட்டத்தைக் கடந்து நகரமாக மாறிவிட்டது காரணம் தனிச் சிங்களக்கிராமம். தோட்டம் என்பதைத்தான் “தொட்டம” ஆக்கிவிட்டார்களோ என்ற சந்தேகத்துடன் தேடலில் இறங்கினேன். பழைய வரைபடங்களைத் தேடினேன்.
திருக்கோவில் என்ற தனித் தமிழர்கள் வாழுகின்ற இடத்தை “கந்தகோளப்பட்டினம்” என்று குறித்திருந்தார்கள். இறுதியில் ‘அந்திவானம் பதிப்பகத்தாரால்’ வன்னியில் புதிதாக அச்சிடப்பட்டிருந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் வரைபடம் எனக்குக் கிடைத்தது.
“தமிழர்களின் மரபுவழித் தாயகம்” என்ற தலைப்பில் அந்த வரைபடம் இருந்தது. அதில் “தொட்டம” வைத் தேடினேன் அங்கே “தொட்டம” இருக்கவில்லை, பதிலாக “மாந்தோட்டம்“என்று அழகு தமிழில் எழுதப்பட்டிருந்தது.
சிங்களம் டி எஸ் சேனநாயக்கவின் காலத்திலிருந்து நில அபகரிப்பிலும் (Land grabbing) திட்டமிட்டு செயல்படுகின்றது. எங்களின் எட்டாவது மாவட்டம் எட்டாது போய்விடுமா..?
ஒட்டுமொத்த அம்பாறையிலும் தமிழர்களின் நிலை பரிதாபமாகவே இருந்தது.
அவர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டிருந்தமையை சில கல்விமான்கள் மிகவும் வேதனையுடன் எம்மிடம் சொன்னார்கள்.
“அம்பாறையில் சிறிய மலைகளை உடைத்து நொருக்கி சிறுகற்களாக மாற்றி விற்கும் உரிமம் கூடத் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது.”
பாறைகளை உடைக்கும்
சிறுவெடிமருந்துகள் தமிழர்களிடம் இருந்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என காரணம் கூறப்பட்டது.
முதலாளிகளும் தொழிலதிபர்களும் தமிழர்கள் தரப்பில் உருவாகுவதையும் சகோதர இனத்தவர்கள் ஒரு போதும் விரும்பியதில்லை.”
கடாரம் வென்ற அல்லது இமையம் வென்ற செந்தமிழின் காவலர்களன புலிகள் இந்த அபகரிப்பை பெருளவு தாமதித்தார்கள்.
இனி என்ன எல்லாம் “தர்மசங்கடம் சங்கம் கச்சாமிதானா…?”
“IF WE DO NOT OCCUPY THE BORDER. THE BORDER WILL COME TO US”
தொடரும்…
நன்றி
– வயவையூர் அறத்தலைவன் –