ஆனையும் புலிமாமா வீடும்

ஆனைகள் அழகழகாய் சோடி சோடியாய் அணிவகுத்து வந்து ஆடிப்பாடிச் {டூயட் பாடி} செல்லும் அந்தப் பொன்னூரின் பெயர் தென்னியன்குளம் ஆகும்!

 

தென்னியன்குளத்துக் கிராமத்தின் அடர் அடவியும் அடவியை அண்டிய பெரியகுளமும் குளத்தோர வயல்வெளியும் ஆனைகளினதும் ஏனைய காட்டு விலங்குகளின் சொர்க்காபுரி என்றே பசொல்லலாம்.

பெற்றோரியத்திற்குப் பெயர் பெற்று
அப்படித்தான் ஒரு முறை டூயட் பாடிய ஒரு சோடி
ஆனை ஒரு குட்டியைத் தவறவிட்டுச் சென்றுவிட்டன.

வேட்டைக்கு சென்ற ஒருவர் காட்டுவித்தனில் தனித்து அலைந்த அந்தக் குட்டியை அங்குள்ள தேவாயலப் பங்குத் தந்தையிடம்
பக்குவமாய் ஒப்படைத்தார்.

தேவாயலத்தில் பசியால் கத்திய ஆனைக்குட்டிக்கு தனது பாவனைக்கு வைத்திருந்த பாலைக் கொடுத்தார் பங்குத் தந்தை.

ஆனைக்குட்டி பசி அடங்காமல் பிளிறிய போது அந்தச் சத்தம் “புலிமாமா”வின் செவியில் வீழ்ந்த போது அவர் கலங்கிவிட்டார்.

ஒரு சிற்பக்கலைஞரான அவர் எம் மண்ணில் செவிப்பறை கிழியக் போர்ப்பறை கேட்ட காலத்தில் தலைவர் பாசறை தேடி வந்தவர்.

ஒரு கலைஞனுக்குரிய இரக்கமும் போராளிக்குரிய ஈகையும் கொண்டவர் ஆனைக்குட்டியை முகாமுக்கு கூட்டி வந்து பாலூட்டினார்.

பானை வயிறு நிறையப் பால்குடித்து ஓய்வு கொண்ட ஆனைக்குட்டி மாலைக்கருக்கலின் இருள் கவிந்த போது மீண்டும் அந்த ஊரே அதிரக் கத்தத் தொடங்கியது.

காடுசார் பட்டறிவு மிக்க மக்கள் பதறியடித்து ஓடோடி வந்தனர்!

அவர்களில் ஒரு பகுதியினர் ஆனைக்குட்டி மீதான பாசாத்தால் எம் முற்றத்தில் கூடினர்.

இன்னொரு பகுதியினர் பயத்தினால் எம் முற்றத்தில் கூடினர்.

ஆம்,

இருள் கவிந்த பின்னர் இந்த ஆனைக்குட்டி இதே உரப்புடன் ஊர் அதிரக்கத்தினால், அந்த தென்னியங்குளக்காட்டில் உள்ள ஆனைகள் பக்கத்துக்காட்டு ஆனைகளையும் கூட்டி வந்து அந்த ஊரையே துவம்சம் செய்தழித்துவிடும்.

தம் குட்டியை மீட்டுச் செல்ல வரும் ஆனைகளின் அட்டூழியத்தால் இங்கொரு பிரளயமே வெடிக்கும்
என்றார் ஏட்டறிவும்
பட்டறிவும் கூடவே காட்டறிவும் நிரம்பப் பெற்ற ஒரு மூதாளர்…..!

தொடரும்……!