தமிழர் திருநாள் வாழ்த்துகள்

தரணி முழுவற்குமான தத்துவஞானத்தை தந்த தமிழர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் இரண்டு என் மனதை வெகுவாகக் கவர்ந்தவை ஆகும்.🎋

1.தைப்பொங்கல்
2. ஆடிக்கூழ்

எம் தானியக்களஞ்சியத்தில் தானியம் ‘நெல்லு’பொலிந்து நிரம்பும் போது பொங்குவோம்! 🌾

வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் கடந்து செல்லும் போது கையிருப்பில் இருக்கும் “நெல்” அரைவாசியாக குறைவடையும்.🌾

எம் தானியக்களஞ்சியத்தில் தானியம்’நெல்லு’குறையத்தொடங்கும் போது சிறிதளவு அரிசி போட்டு கூழ் காய்ச்சுவோம்! 🎋

ஆம், “ஆடிக்கூழ்” காய்ச்சுவது என்பது அயலையும் எமையும் எச்சரிக்கும் முகமாக நடைபெறும் தமிழர் விழா ஆகும்!🌾

ஆடி கடந்து ஆவணி தொடங்க பெய்யும் சிறு மழையுடன் “புழுதி விதைப்பு” தொடங்கிவிடும்.🎋

ஆவணி கடந்து வரும் அடுத்தடுத்த மாதங்களில் பெய்யெனப் பெய்யும் பெருமழையுடன் “சேத்து விதைப்பு” தொடங்கிவிடும்.🎋

பெருமழையுடன் கூடிய மூன்று திங்கள் நிறைவடைய ‘கதிர்கள்’ முதிர்வடைய அறுவடை ஆரம்பிக்கும்.🌾

அழகிய அறுவடையை “அறுவடைத் திருவிழா” என்றும் “உழவர் திருநாள்” என்றும் “தைப்பொங்கல்” என்றும் கொண்டாடுகிறோம்.🌾

அர்த்தம் பல பொருந்திய தமிழர் எம் பண்பாட்டை என்னும் போது எப்போதுமே பெருமைதான்!🌾

எம் தமிழுறவுகள் அனைவருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!🙏