உலகத் தாதியர் தினத்தில் தமிழீழத் தாதியரால் பெருமை கொள்வோம்

66

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் தேதியும் சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எங்களின் சொர்க்கபூமியான தமிழீழத்திலும் ஆண்,பெண் செவிலியர்கள், எவ்வித ஊதியமுமின்றி மக்கள் பணியாற்றினார்கள்..

இனவாத அரசின் பல்வேறு தடைகளிற்குள்ளும் பட்டமெடுத்த தாதியர்போல் பட்டறிவுத்தாதியர்கள் தேவதைகளாகி பல்லுயிர்களைக் காத்தார்கள்…

களமருத்துவம் உட்பட சகல துறைகளிலும் பட்டறிவுடன் திறம்பட செயற்பட்ட எம் ஈழத்தின் தாதியர்களை மனதிருத்தி நன்றிகளுடன் நினைந்து நிற்கிறோம் இந்நாளில்..

“பட்டமுமில்லை பதவியுமில்லை பட்டறிவுப் புலிகள் மக்கள் துயர் தீர்க்கும் இவர் மருத்துவப் புலிகள்”

தாயகப்பாடகி

பிறின்சி ரஞ்சித்குமார்.