நான் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் பின்னர் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் சிங்ஹெல்த் நிறுவனத்திலும் தலைமைத்துவத் திறன்களில் பயிற்சி பெற்றேன். பள்ளி மாணவர்கள் முதல் பட்ட பின் படிப்பு மருத்துவர்கள் வரை தலைமைத்துவ பயிற்சி வழங்கிய அனுபவம் எனக்கு உண்டு.
தலைமைத்துவ பயிற்சி தொடர்பான அனைத்து சர்வதேச பயிற்சி நெறிகள் மற்றும் கற்கை வகுப்புகளை எடுத்து ஆராய்ந்தால் பின்வரும் முக்கியமான கூறுகளை காணமுடியும்.
1. தகவல் தொடர்பு திறன் (communication skills)
2. நேர மேலாண்மை (time management)
3. மன அழுத்த மேலாண்மை (stress management)
4. உந்துதல் (motivation)
5. குழு மேலாண்மை மற்றும் தலைமைத்துவ பாணிகள் (team management and leadership styles)
6. நெறிமுறைகள் (ethics)
7. பயிற்சி பெறுபவர்கள் தொழில் வல்லுநர்களாக இருந்தால் வாண்மை (professionalism)
இராணுவ தலைமைத்துவ திறன்கள் சிவில் தலைமைத்துவ திறன்களிலிருந்து வேறுபட்டவை. அதனால்தான் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிபர்கள் போன்ற சிவில் தலைமைத்துவ பயிற்சி பெற வேண்டியவர்களுக்கு இராணுவம் மூலம் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது.
மறுபுறம் தலைமைத்துவ பயிற்சி பெறாதவர்கள் பள்ளி மாணவர்களிடம் சென்று தலைமைத்துவம் பற்றி பேசுவதும், மாணவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளித்ததாகக் கூறுவதும் தற்போது நகைச்சுவை ஆகிவிட்டது. ஆயுதப் படையினர் மற்றும் தலைமைத்துவ பயிற்சி என்றால் என்ன என்று அறியாதவர்கள் தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் நடத்தும் பித்தலாட்டங்களை இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.
சதுரங்க விளையாட்டு பயிற்சியின் போதும் இது போன்ற பித்தலாட்டங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கான சதுரங்க பயிற்சியாளர் சான்றிதழ் என்னிடம் உள்ளது. மறுபுறம் கோப்பாயில் இராணுவத்தினர் பாடசாலை மாணவர்களை வரவழைத்து சில சதுரங்க வீரர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். சதுரங்க வீரர்களுக்கும் சதுரங்க பயிற்சியாளர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதேபோல் சமூகத்தில் தலைமைப் பதவிகளை வகிப்பவர்களுக்கும் தலைமைத்துவ பயிற்சியாளர்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது.
அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள், அதனால்தான் எதிர்கால பார்வை இல்லாத அரசியல்வாதிகள் உண்மையான தலைவர்களாக இருக்க முடியாது.
தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக மேலதிக சந்தேகங்கள் உள்ளவர்கள் குறிப்பாக பாடசாலை அதிபர்கள் தொலைபேசி வாயிலாக (0714748868) என்னுடன் தொடர்பு கொள்ள முடியும்.
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்,
வருகை நிலை விரிவுரையாளர் , கொழும்பு மற்றும் யாழ் பல்கலைக்கழகங்கள்
17.5.2023