நாளொரு குறள் 14

324

நாள் : 14
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வான் சிறப்பு
செய்யுள் : 4

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

வாரி வாரி வளங்கும் வள்ளல் புயல்.
வள்ளல்கள் வழங்காத போது எழுத்தேர் பூட்டி புலவர்கள் ஏடுகளை உழுவதில்லை.
புயல்மழை என்னும் வள்ளலின் வளம் குன்றும் பொழுது உழவர்கள் ஏர் பூட்டி உழுவதில்லை.

விதைக்கும் விதை பயன்தர வேண்டுமெனில் மழை வேண்டும். இல்லையெனில் விதை வீணாகும்.
வள்ளல்கள் ஆதரவு தராத பொழுது எழுத்தேர் பூட்டி உழுது விதைக்கும் கருத்துகள் பலன் தருவதில்லை.

இரண்டையும் ஒன்றாக்கி ஒரு சிறு உவமையை மிகப்பெரிய உருவகமாக்கிக் காட்டுகிறார் வள்ளுவர்.

வள்ளல்கள் ஆதரவு படைப்பாளிகளுக்குத் தேவை
மழையின் ஆதரவு உழவர்கள் என்னும் படைப்பாளிகளுக்கும் தேவை.