PENTADACTYL LIMB

🦎🦎🦵PENTADACTYL LIMB 🦵🦎🦎
————– ————- ——

மனிதர்களின் கால் தடங்களை பெரும்பாலும் ஒத்திருக்கும் இந்தத் தடங்கள்
கருநிறம் கொண்ட கரடியினுடையது ஆகும்.

காடுகளில் தடம் பார்த்து நடந்து திரிபவர்களை சில வேளை திகைக்கவும் திடுக்கிடவும் வைக்கும் தடங்களாக இவை அமைவதுண்டு!

தேனையும் மீனையும் விரும்பி உண்ணும் இயல்பு கொண்ட கருங்கரடிகள் மாங்கனித்தீவின் வட கிழக்கு காடுகள் எங்கும் உண்டு.

இந்தக் கருங்கரடிகளாலும் போராளிகளினதும் வேட்டைக்காரர்களதும் காட்டு வாழ்வு கரடு முரடான சம்பவங்கள் பல உண்டு!

எங்கள் திருவூர்களின் பெயர்களிலும் “கரடி” இடம்பிடித்தே உள்ளது.

(01.)’கரடி’ப்போக்கு – கிளிநொச்சி
(02.)’கரடி’யனாறு – மட்டக்களப்பு

ஆம், தமிழர்தம் வாழ்வியலில் ‘கரடி’ இடம்பிடித்தே உள்ளது.

தாய்த்தமிழகத்திலும் ‘கரடி’ எனத்தொடங்கும் அல்லது ‘கரடி’ என முடியும் ஊர்கள் இருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன்.