சமுதாயம்

737

மனித இனத்தின் அடித்தளம் சமுதாயம். பல மனிதர்கள், குடும்பங்கள் சேர்ந்தது சமுதாயம். ஒவ்வொரு மனிதன், குடும்பங்களின் செயல்பாடுகளும் சமுதாயத்தில் எதிரொலிக்கும். அதேபோல் சமுதாயத்தின் தாக்கங்கள் ஒவ்வொரு மனிதன் மற்றும் குடும்பங்களில் எதிரொலிக்கும். தனி மனிதர்கள், குடும்பங்கள், சமுதாயத்தால் பல நன்மை தீமைகள் ஏற்பட்டன.

ஒரு மனிதனின், குடும்பத்தின் நன்மை தீமைகள், வறுமை என எல்லாவற்றிலும் சமுதாயம் பங்கெடுக்கும். ஒவ்வொருவரும் சமுதாயத்தின் மீது பயமும் அக்கறையும் கொண்டிருப்பார்கள்.

எத்தனையோ அறிவாளிகள், கொடையாளிகள், அரசியல் தலைவர்கள், சமூகசேவையாளர்கள், தங்கள் சமுதாயத்தின் மேல் கொண்ட பற்றின் காரணமாக எத்தனையோ நன்மைகள் செய்துள்ளனர். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள். உதாரணமாக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தல், தங்கள் சொத்துக்களையே கொடுத்தல் என பலவற்றை சொல்லலாம்.

கோவில் விழாக்களில் ஒற்றுமையாக ஒன்றுகூடி செயல்படுவார்கள். ஊர் நலன்களில் ஒற்றுமையாக செயல்படுவார்கள். முன்னைய காலங்களில் கூடாத செயல்கள் செய்தவர்கள் சமுதாயத்துக்கு பயந்து தங்களை திருத்திக் கொள்வார்கள். முன் பின் தெரியாத மனிதர் கூட ஒருவன் சமுதாய ஒழுக்கங்களை மீறி நடக்கும்போது எனக்கு ஏன் என இருக்காது, சரி பிழைகளை கேட்பர். உதாரணமாக சிறு வயதினர் புகைத்தல், மதுபானம் போன்ற தீய செயல்களில் ஈடுபடும்போது எங்களுக்கு என்ன என இருப்பதில்லை. எத்தனையோ சரி பிழைகளை சமுதாயமாக கூடி எதிர்த்து செயல்படுவார்கள்.

தனி மனிதன் மற்றும் குடும்பங்கள் சமுதாயத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.ஓர் மனிதன் ஒழுக்கமுடன் வளர்ந்தாலும் சமுதாயத்தில் உள்ள சில தீயவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு தங்கள் வாழ்க்கையை அழிக்கின்றனர். பல குடும்பங்கள் சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் நடவடிக்கைகளால் அழிக்கப்படுகின்றன. துன்பங்கள், அவமானங்களை எதிர்நோக்குகின்றன. கிளியை வளர்த்து பூனைக்கு இரையாக்கியது போல்

தனி மனித,சமுதாய செயல்பாடுகள் என்றும் சிறந்த முறையில் இருப்பது நன்று. இன்றைய சமுதாயம் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களாலும், பொருளாதார வசதிகளாலும் பல வழிகளில் அழிகின்றது. ஆசிரியரை கண்டு பயர்ந்த காலம் போய், ஆசிரியர் பயப்பட வேண்டி உள்ளது. முன்னைய காலங்களில் பொருளாதார வசதிக் குறைவால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தனர். வசதிகள் ஏற்பட அவர் யார் எனக்கு சொல்ல, நீ யார் என்னை கேட்க, நான் செய்தால் உனக்கு என்ன? உன் வேலையை பாத்திட்டு போ. யாருக்கோ தானே பிரச்சனை எங்களுக்கு என்ன என்ற மனப்போக்கு அதிகரித்தது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் பல நன்மை தீமைகள் ஏற்படுகின்றன, எனினும் சமுதாய அக்கறை உள்ள மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.

அன்புடன்
வ.பொ.சு.==மாரிட்டி மண்ணின் மைந்தன்