லெப்.கேணல் ஜெரி வீரச்சாவு 29.05.1998
உறங்காத கண்மணியாய் -எங்கள்
ஊர்களை காத்த உத்தமன்!
எங்கள் பாசறைகளில் வாழ்ந்த காலத்தைவிட எதிரியை வேட்டையாட அதிக காலத்தை செலவிட்ட சுத்தவீரன்!
ப்
வேவு அணியின் தலைவனாய் எதிரியை வேவு செய்து வேரோடு தாக்கியழித்த இவன் வரலாறு பென்னம் பெரியது!
எங்களைவிடவும் எங்கள் அடர் வனத்தாய் அறிவாள் தன் பிள்ளையின் வெஞ்சினம்!
அடர்ந்த அடவிகளும் அருவிகளும் இவன் நெருப்பாறுகளைக் கடந்த வீரவரலாறு சொல்லும்!
“வெள்ளை ஜெரி”என்றும் “வெள்ளை
ஜெரி அண்ணை” என்றும் நண்பர்கள்
நாங்கள் அழைத்து மகிழ்வோம்!
உடல் நிறம் மட்டுமல்ல – இவன்
உள்ளமும் வெண்மையானது!
வீரவணக்கம் ஜெரி அண்ணன்!🎖