கதவுகள், யன்னல்கள் எல்லாம் உட்பக்கமாகப் பூட்டப்பட்ட வீடொன்றின் அறையின் நடுவே சடலம் ஒன்று இருந்தது. அதன் இடப்பக்கத்தில் துப்பாக்கி ஒன்றும், அலுவலகப் பை ஒன்றும் இருந்தன. வலப்பக்கத்தில் “ரேப்” ஒன்று இருந்தது.
சடலாமாக இருக்கும் நபரின் காதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றதாகவும் அன்றிலிருந்து அவர் விரக்தியாகக் காணப்பட்டதாகவும், மனமுடைந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் அயலவர்கள் ஊகம் சொன்னார்கள்.
அனைத்தையும் உள்வாங்கிய பின் ரேப்பின் “பிளே”பட்டனை தட்டினார் காவல் அதிகாரி ஒருவர். அதில் “இந்த உலகில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை; அதனால் நான் வேறு உலகுக்குப் போகிறேன்” என்ற குரலும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டுச் சத்தமும் பதிவாகி இருந்தது. தற்கொலைதான் என்று காவல்த்துறை முடிவுக்கு வர ஒருவர் மட்டும் தற்கொலை அல்லக் கொலை என்றார்.
நீங்கள் சொல்லுங்கள் கொலையா? தற்கொலையா?
சுப்பர் தாசன் அவர்கள் கொலை என்று கண்டுபிடித்திருக்கிறார். ஏனெனில் ஒலிநாடா பின்னோக்கிச் சுத்தப்பட்டிருக்கு