சிங்களவர்கள் “மனிதாபிமானத்தை” காலில் போட்டு மிதித்தபோதும் நாங்கள் “ஜீவகாருண்ணியத்தை” மடி மீது சுமந்தோம்

197

1977 இனவழிப்பை “லங்கா ராணி” எனும் தலைப்பில் பொத்தகமாய் வெளிக்கொணர்ந்திருந்தவரும் எமைவிட்டு விட்டு வீரசொர்க்கம் அடைந்துவிட்டார்.

தன்னினத்தின் இருப்புக்காய் அவர் செய்தவை ஏராளம். காத்திரமான பணிகளில் ஒன்றாக அவரது எழுத்துப்பணியும் உள்ளது.

மானமிகு தோழர் அருட்பிரகாசம் அவர்கள் எம்மிடமிருந்து விடைபெற்றாலும் அவர் ஆன்மா எங்களுடனேயே உள்ளது.

அவர் படைத்த வரலாற்று ஆவணம் எமை அதிர வைத்த வண்ணமே உள்ளது.

ஆம்,மாங்கனித்தீவின் பெரும்பாண்மை இனத்தவரின் கீழ்த்தனமான வெறியாட்டத்தைத் தொடர்ந்து தமிழர்கள் வடக்கு நோக்கி இடம் பெயர்கின்றனர்.

மாங்கனித்தீவின் மேற்கு கடலால்
கொழுப்பில் இருந்து யாழ் வரையான
கடல் பயணத்தின் தூரம் 200மைல்கள்.

ஆனால்,

மேற்குக்கடல் கப்பல் செல்வதற்கு ஆழம் அற்றது.

ஆதலால்,

கப்பல் கொழுப்பிலிருந்து தெற்கே காலி நோக்கிப்பயணித்து அங்கிருந்து கிழக்குக் கடலை அடைந்து திருகோணமலை ஊடாக ‘லங்கா ராணி’ யாழ் வந்தடைய 600 மைல்கள் பயணம் செய்தது.

அந்தப் பயணம் மூன்று முழுநாட்கள் கடந்து யாழ் மண்ணை அடைகிறது. அதில் அவர்கள் அடைந்த துன்பங்களைக் கண் முன்னே கொண்டு வருகிறார் தோழர் அருட்பிரகாசம்.

சிங்களவர்கள் “மனிதாபிமானத்தையே” காலில் போட்டு மிதித்தபோது தமிழர்களாகிய நாங்கள் “ஜீவகாருண்ணியத்தை” மடி மீது சுமந்தோம் என்பதை ஓரிடத்தில் சாதுரியமாகச் சொல்கிறார் எங்கள் தேசாபிமானி.

“லங்கா ராணி” கப்பலில் பெல்பொட்டம் ரவுசர்ஷ் (Bell-Botton Trousers)அணிந்த ஒரு பெண்மணி ஒருத்தி மடியில் ‘பொமேரியன்’ உடன் யாழ் நோக்கி வந்ததாகச் சொல்கிறார்.

அதை வாசித்த போது முள்ளிவாய்க்கால் நோக்கிய தமிழரின் இடப்பெயர்வு என் நினைவை ஆக்கிரமித்தது.

இந்த ஒளிப்படத்திலும் ஒரு நாய் உண்டு உன்னிப்பாய் கவனியுங்கள்!

Kali Arulpragasam