துயர் பகிர்கின்றோம்.

60

இவர் வயவையின் ஒரு நல்ல ஆசிரியர்
என்று மட்டுமே பலர் தெரிந்து
வைத்திருப்பார்கள்.இதனையும் கடந்து
சிறந்த சமூக அக்கறையாளனுக்குரிய
பல பக்கங்கள் அன்னாருக்குள்
அடங்கியிருந்தது.

வயவையில் ஒரு காலத்திலிருந்த
அசாத்தியமான சிந்தனைகளை
உடைத்தெறிந்தவர்களுள் இவரும் ஒருவர்.

அத்துடன் மானம்பராய் பிள்ளையாரின் கட்டட திருப்பணியின்போது தனது
உடல் உழைப்பை முழுமையாக
வழங்கியவர் மட்டுமல்லாது
இவர் ஒரு நடிகனுமாவார். அன்னாரின்
நாடகங்களை சிறுவயதில்
வயவையில் நாம் பார்த்திருக்கின்றோம்.

அவர் புலம் பெயர்ந்து
வாழ்ந்த பிரான்சு நாட்டிலும்
தனது மக்கள் நல செயற்பாடுகளை
முன்னெடுக்கத் தவறவில்லை.
பிரான்சில் முதன் முதலில் தமிழ்ப்
பள்ளிகளை உருவாக்குவதில்
அன்னார் முன்னின்று செயற்பட்டவர்.இப்பள்ளிகளில்
தமிழ் ஆசிரியராகவும்
கடமையாற்றியவர்.
மேலும் தமிழரின் தேசிய தொலைக்காட்சியாகியT.T.Nஇலும்
இவர் பணியாற்றியிருந்தார்.

இவரது அடக்கமான பேச்சும், அறிவான சிந்தனையும்,அன்பாகப்
பழகும் தன்மையும் இவரின்
இச் செயற்பாடுகளுக்குத் துணை நின்றன.

அன்னாரின் இழப்பானது எல்லோரையும்
வேதனைப்படுத்தியுள்ளது.இவர்
பிரிவால் துயர்கொண்டுள்ள
இவரது குடும்பத்தினருக்கும், மற்றோருக்கும்
ஆறுதல் கூறுவதுடன் துயரில் பங்கேற்று அன்னாரின் ஆத்மா இறைவன்தாழ் பணிய
வேண்டுவோம்.