தரைப்பாதையை தீபன் அவர்கள் அமைத்துத் தருவார்

நாங்கள் தரையிறங்கியவுடன் கடல்வழி விநியோகத்தை எதிரி என்ன விலை கொடுத்தாவது தடுப்பான்.

அதே நேரம்…

களமருத்துவர்களாகிய நீங்கள் காயமடையும் போராளிகளை வன்னியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்ப முடியாதே என யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தரைப்பாதையை தீபன் அவர்கள் அமைத்துத் தருவார்”….

அதுவரை விழுப்புண் அடைந்தவர்களுக்கு உங்களால் இயன்றவரைக்கும் சிகிச்சை அளியுங்கள்.”

அதற்குரிய மருந்துப் பொருட்களையும் ரேகாவிடம் கேட்டு வாங்கி உங்கள் உங்கள் படகுகளில் கொண்டு வாருங்கள்.

தீபன் அண்ணா குறித்த தனது நம்பிக்கையை பெரும் மரியாதை கலந்து சமர்களநாயகன் வெளிப்படுத்தினார்.

ஆனையிறவுப் பெருந்தளத்துக்கான
விநியோக வழிகளை ஊடறுத்து துண்டித்து அங்குள்ள தப்பி ஓடாமல் ஆனையிறவுக்கு பின்னால் ஒரு Cut out போடப்படும்.

அஃதே,

ஆனையிறவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து எந்த உதவிகளும் கிடைக்காமல் தடுப்பதற்கு Cut off போடப்படும்.

இந்த Cut out இற்கும் Cut off இற்கும் இடையே அமையப்போகும் ஒரு குறுகலான நிலத்தில் ஒரு களமுனை வைத்தியசாலையினை அமைக்கப்போகின்றோம் என்பது எமக்கு விளங்கியது.

அதிக குருதிப் பெருக்கு ( Sever Hemorrhage) ஏற்பட்டவர்களை சாதாரண நாளத்தினூடு ஏற்றும் நோமல் சேலைன்கள் மூலம் காக்க முடியாது.

அதிக குருதிப் பெருக்கு உண்டானவர்களுக்கான ஒரே ஒரு பரிகாரம் அல்லது தீர்வு குருதியேதான்.

எனவே எம்முடன் குருதியையும் அதிகமாக எடுத்துச் செல்லவேண்டும் என்பது எமக்கு உறைத்தது.

குருதியை சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்க முடியாது.

செங்குருதியை பாதுகாத்து வைப்பதற்காய் சிறிய குளிர்சாதன பெட்டியையினையும் (Fridge) வேறு களமுனை வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதுதான் வழமை.

குளிர்சாதன பெட்டிக்கான மின் விநியோகம் செய்வதற்கு சின்னஞ் சிறிய ஜெனரேட்ட்டர்களை பயன்படுத்துவோம்.

சின்ன ஜெனரேட்ட்டர் சத்தம் சிறியதாயினும் காவலரண்களைவிட்டு வெளியே வேவு நடவடிக்கையில் ஈடுபடும் எதிரியின் காதுகளில் வீழ்ந்துவிடாது தடுப்பதற்கான அதற்கென தனியான சின்னஞ் சிறிய கிடங்கு வெட்டி அதனுள் வைத்து ஜெனரேட்ட்டரை பாதுகாப்போம்.

இதனை முன்னெச்சரிக்கையான நடவடிக்கையையும் தாண்டி எமை மோப்பம் பிடித்த எதிரியின் வேவு
அணி ஒன்று 1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறுய் காலத்தில் புளியங்குளத்தில் எமது களமுனை வைத்தியசாலையை தாக்கிய சம்பவமும் அதனால் களமருத்துவர் அருள் விழுப்புண் அடைந்த பட்டறிவும் எம்மிடம் இருந்தது.

அதே நேரம் சின்னஞ் சிறிய படகுகள் மூலம் கடல்வழி எமது வடமராட்சி கிழக்கின் நெய்தல் நிலத்தில் தரை இறங்கபோகும் நாங்கள் குளிர்சாதன பெட்டியையினையும் ஜெனரேட்ட்டரையும் காவிச்செல்ல முடியாது.

பதிலாக “கூல் பொக்ஸ்” ஒன்றில் எல்லா குருதி வகையை சேர்ந்தவர்களுக்கும் ஏற்றக் கூடிய ஓ நெகடிவ் குருதிகளையும் (O Negative Blood 🩸)எம்முடன் வைத்திருந்தோம்.

ஆனாலும்,

கடல்வழி விநியோகத்தினை எதிரி என்ன விலை கொடுத்தாவது தடுப்பான் என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் அழுத்தம் திருத்தமாய் கூறியதும் இன்னும் இரண்டு
கூல் பொக்‌ஷ்களில் கொஞ்சம் அதிகமாகவே ஐஷ் கட்டிகளை இட்டு எடுத்துச் சென்றோம்.

தரைவழிப்பாதையை தீபன் அண்ணா உடைத்து விழுப்புண் அடைந்த போராளிகளை பின்னுக்கு அனுப்பும் வரை அந்த செங்குருதி 🩸செங்களமாடிய வீரர்களின் உயிர்களைக் காத்து நின்றது.

இப்போது மீண்டும் எம் செவிகளில் லீமாவின் அசரீதி கேட்கின்றது!🥁

“தரைப்பாதையை தீபன் அவர்கள்
அமைத்துத் தருவார்”….

ஆம், அந்த வெற்றி வாசகம் குடாரப்புத்_தரையிறக்கம் நடைபெறுவதற்கு முதல் நாள் (25/03/2000) சொன்னவை.

லீமா திருவாய் மலர்ந்து உதிர்த்த
அந்த ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இன்றும் என் காதில் ரீங்காரம் செய்கிறது.”

லீமா எனும் குறியீட்டுப் பெயர் கொண்ட சமர்க்களநாயகன்
சொன்னது போலவே தாளையடியை ஊடறுத்து பல மைல்கள் நீளமான காவலரண்களையும் மினி முகாம்களையும் இராணுவ தளங்களையும் துவம்சம் செய்தபடி
72 மணி நேரத்துக்குள் பிரிகேடியர் தீபன் வந்தார்.

(நம்பிக்கை நாயகன் பிரிகேடியர் தீபன் அவர்கள் குறித்த சிறுதுளி)

வீரவணக்கம் தீபன் அண்ணா! 🎖

தொடரும்…

 

01) சாதியின் பெயரால்,
02) மதத்தின் பெயரால்,
03) பிரதேசவாதத்தின் பெயரால்,
04) அரசியல் கட்சிகளின் பெயரால்

தமிழர்களாகிய நாங்கள் சண்டையிட மாட்டோம்” என்ற நம்பிக்கைகளுடனும் எங்கள் இனம் இந்த மேதினி மீதிலே மேன்மையடையும் எனும் அபிலாசையுடனும் எங்கள் மாவீரர்கள்
அறிதுயில் கொள்கிறார்கள்!