“ஆனையும் தமிழர் எம் தொல்லூர்களும்”

“ஆனையும் தமிழர் எம் தொல்லூர்களும்” 🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

01) ஆனையிறவு
02) ஆனைப்பந்தி
03) ஆனைக்கோட்டை
04) ஆனைவிழுந்தான்
05) ஆனைப்பாளி
06) ஆனைமடு
07) ஆனைகட்டி
09) ஆனைமுடி

10) அத்திக்கடவு
11) அத்திக்கட்டானூர்

ஆம்,

எங்கள் தொல்லூர்களில் எல்லாம் “ஆனை”யும் நெருக்கமாய் உறவாடி நிமிர்கின்றது.

ஆனைக்கும் எமக்குமான இந்த நெருக்கம் தமிழர்தம் வீரக்கதைகளை சொல்வதாய் யான் இயம்பினேன்.

“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை”

என்ற அழகான வரிகள் மூலம் தமிழர்களின் அன்றைய தாய்த்தமிழகத்தின் தானியத் தன்னிறவையும் ஆனையை அன்புடன் விவசாயத் தேவைக்காகவும் அரவணைத்து வீரவாழ்வுதனை கண்ட வீரவம்சத்தை ஆதாரமாக்கி துணை கொண்டேன்.

“ஆனை வியாபாரம்” காரணமாய் எழுந்த பெயர்கள் இவை என நண்பன் புலம்பினான்.

ஈழத்தின் மத்திய பகுதியின் அடவிகளில் பிடிக்கப்பட்ட யானைகள் இந்த ஊர்களில்தான் தங்க வைக்கப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணத்தின் கடல்வழியாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதென சொல்லப்படும் வரலாறுகளை நண்பன் ஆதாரமாக்கி துணை கொண்டான்.

இந்த தொல்லூர்களை விடவும்,

1) கரிப்பட்டமுறிப்பு
2) கரிக்கட்டுமூலை

ஆகிய ஊர்களில் இடம் பெற்றிருக்கும் “கரி”யும் ஆனையையே குறித்து நிற்கின்றது.

கரிப்பட்டமுறிப்பில் – “கரி”- என்பது ஆனையையும் “படுதல்”என்பது அகப்படுதல் என்பதையும் சுட்டி நிற்கின்றது.

“கரி” எனத் தொடங்கும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் இந்த இரண்டு ஊர்களிலும் ஆனை பிடிக்கப்பட்ட இடங்கள் ஆகும்.

 

ஆனைகளும் வேகக் குதிரைகளும் மாந்தர்க்கு போர்க்களத்திலும் பேருதவி புரிந்தன.

செங்களத்திடை சேனைகள் பல வெல்ல ஆனைபடையாகவும் குதிரைப்படையாகவும் தோள் கொடுத்தன.

அஃதே,

ஒட்டகச்சிவிங்கிகளும் உதவின, ஆனால் ஒய்யாரமானதும் ஒல்லியானதுமான ஒட்டகச் சிவிங்கிகள் அழிவுக்கு துணை போகலாமல் நளினமாக நடைபயின்று சமாதானமாக *அன்புமொழி* பேசின.

ஆம், அந்தக் காலத்தில்
ஒட்டகச்சிவிங்கிகள் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சன்மானமாக வழங்கப்பட்டன.

இந்தப் பரிசுகள் இரு நாடுகளுக்கிடையேயான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் சின்னமாக விளங்கின.

வரலாற்று நாவல்களை எழுதிய எழுத்தாண்மை மிக்க எழுத்தாளர்களான சாண்டில்யனும் கல்கியும் கூட ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு யானைகள் கடத்தப்பட்டதை பதிவு செய்துள்ளார்கள்.

தென்னிந்தியாவின் அரசர்கள் ஈழத்திலிருந்து பெறப்பட்ட ஆனைகளை வடவிந்தியாவின் அரசர்களுக்கு விற்பனை செய்த கதைகளையும் வரலாறு பதிவு செய்தே உள்ளது.

“வினையால் வினையாக்கிக் கோடல்
நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.”

(குறள் எண் 678)

எனும் குறள் உட்பட மொத்தம் ஆறு குறள்களில் “ஆனை”யை தன் ஈரடிக் குறள்களுக்கு பலம் சேர்க்க ஐயன் வள்ளுவப்பெருந்தகையும் அழைத்தே உள்ளார்.

மனிதர்களுக்கு மதம் பிடித்த போதெல்லாம் போர்க்களங்களில் தம்முயிரை மாய்த்த ஆனைகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் ஆனைகளால் அவலமாய் இறந்த மக்களுக்கும் அஞ்சலி செலுத்தி பிறிதொரு பதிவில் தொடர்கின்றேன்.

குறிப்பு : “அத்தி” என்பதும் ஆனையைக்
குறிக்கும் சொல் ஆகும்.

3 COMMENTS

  1. ஆனையும் குதிரையும் மாந்தர்க்கு போர்க்களத்தில் உதவின.சேனை பல வெல்ல ஆனைபடையாகவும் குதிரைப்படையாகவும் தோள் கொடுத்தன.

    அஃதே, ஒட்டகச்சிவிங்கிகளும் உதவின, ஆனால் அழிவுக்கு துணை போகலாமல் நளினமக நடைபயின்று அன்புமொழி பேசின.

    ஆம், ஒட்டகச்சிவிங்கிகள் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சன்மானமாக வழங்கப்பட்டன. இந்தப் பரிசுகள் இரு நாடுகளுக்கிடையே சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் சின்னமாக விளங்கின.

Comments are closed.