குரைக்கிற நாய் கடிக்காதா?

115

குரைக்கும் நாயால் கடிக்க முடியும். ஆனால் குரைத்துக் கொண்டே இருக்கிற நாயால் கடிக்க முடியாது. (குரைக்கும் போது கடிக்க முடியாதது நாயின் பிறப்பியல்பு).

முதல் முறை குரைக்கும் போது எங்களுக்கு நாயுரைப்பது எங்களுக்கு உறைக்கும். மறுமுறை கொஞ்சம் குறையும். தொடர்ந்து குரைத்தால் எமக்கு உறைக்கவே உறைக்காது.

ஒரு முறை நாய் கடித்தால் கடித்த வடு மறைந்தாலும் நாய் உரைத்தது என்மை விட்சு மறையாது.(எத்தனை வயசானாலும் இத்தனை வயதில் இன்ன நாய் என்னைக் கடித்தது எனப் பலரும் சொல்லக் கேட்டதுண்டு)

அதே போல் நெடுகக் கதைத்துக்/சொல்லிக் கொண்டே இருந்தால் அலட்டல் என்றவாறு அப்பால் நகர்வர். அதிகம் பேசாத ஒருவர் ஏதாவது சொன்னால் உடனடியாகக் கவனத்தில் கொள்வர்.

ஆம்.. அதிகம் பேசாத ஒருவரை விட கொஞ்சமாகப் பேசும் ஒருவர் கதைத்தால் அடுத்தவர் கவனம் ஈர்க்கப்படும். எப்படா கதைப்பார் என எதிர்பார்க்கப்படும்.