அதிர்ஷ்ட தேவதைக்கு ரொம்பவும் மனவருத்தமா போயிட்டது.. அறிவு தேவதை கவலைப் படாதே அதிர்ஷ்டம். நான் முயற்சி பண்ணறேன்னு சொல்லிச்சு.
அப்புறம் அறிவு தேவதை அந்த விவசாயி வீட்டுக்கு இருட்டின பின்னால போச்சு. போயி அங்க கட்டி இருந்த தில்லாலங்கடி மாட்டை அவுத்து துரத்தி விட்டுட்டு, அதே மாதிரி உருவம் கொண்ட, வேளைக்கு 30 லிட்டர் பால் கறக்கும் நல்ல கறவை மாட்டை உண்டாக்கி அங்கே கட்டிட்டு வந்திடுச்சி..
அடுத்த நாள் பால் கறந்த விவசாயிக்கு ஒரே சந்தோசம். பால் நிறைய கிடைச்சதும் அக்கம் பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கொடுத்தாரு. பாலும் ருசியா இருந்ததால எல்லோரும் விவசாயிகிட்ட பால் வாங்க ஆரம்பிச்சாங்க. விவசாயிக்கும் நல்ல வருமானம் வர ஆரம்பிச்சது. எல்லாத்துக்கும் காரணம் அதிர்ஷ்ட தேவதை கொடுத்த நாலு மூட்டை தவிடுதான்னு விவசாயி பெருமையாச் சொல்லுவான்..
எல்லாத்தையும் கவனிச்சுகிட்டு இருந்த அதிர்ஷ்ட தேவதைக்கு விவசாயிக்கு பிரச்ச்சனை தீர்ந்ததில சந்தோஷம்தான் என்றாலும் அறிவு தேவதைக்குப் போக வேண்டிய புகழ் தனக்கு வருதேன்னு சங்கடமா இருந்தது, அறிவு தேவதைக்கு இதைச் சொல்லி புலம்பிச்சு..
அதுக்கு அறிவு தேவதை சொல்லிச்சு…
இது சகஜம்தான் அதிர்ஷ்டம். அறிவுள்ள பெரியவங்க சின்னவங்களுக்கு ஒண்ணும் செய்யாத மாதிரிதான் தெரியும். ஆனால் அவர்கள் எப்பவுமே யாருக்கு எதை எப்பொழுது கொடுத்தா அதனால் நல்ல விளைவுகள் கிடைக்குமோ அதை எல்லாம் ஆராய்ந்துதான் கொடுப்பாங்க.
அதனால பெரியவங்க நமக்கு அதைக் கொடுக்கலை, இதைக் கொடுக்கலை என்று திட்டறது மிகவும் தப்பு. அறிவுள்ளவங்க யாருக்கு எதை எப்போது கொடுப்பது சரி என்பதை யோசிச்சுதான் செய்வாங்க.
அப்படிக் கொடுத்த பின்னால அதனால தனக்குப் புகழ் கிடைக்கணும் என்று நினைக்கவும் மாட்டாங்க. பெற்றவர்கள், ஆசிரியர்கள் இப்படிப் பல பெரியோர்கள் இதைச் செய்துகிட்டேதான் இருக்காங்க. நாம் இப்படி சரியான விதத்தில் உதவியவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடையறாங்க என்ற மனத் திருப்திதான் நமக்கு கிடைக்கும் பலன்.
பலன் கருதாம உதவுவதுதான் தெய்வகுணம். அதனாலதான் நாம் தேவதைகளாக இருக்கிறோம். இதே போல் மற்றவர்களுக்கு உதவும் மனிதர்களும் தெய்வமாக மதிக்கப்படறாங்க..
இதையெல்லாம் கேட்ட அதிர்ஷ்ட தேவதை என்னதான் சக்தி இருந்தாலும் நமக்கு அறிவு குறைச்சலா இருந்தா அதை உபயோகப்படுத்த முடிவதில்லைன்னு தெளிவா புரிஞ்சுகிச்சு. அன்னிக்கு இருந்து அதிர்ஷ்ட தேவதை அறிவு தேவதை பாடம் படிக்கப் போய் விட்டதாம்..
இப்பல்லாம் அதிர்ஷ்ட தேவதை எல்லோருக்கும் கேட்டதை மட்டும் குடுக்கறதில்லையாம். எப்பவாவது குடுத்தாலும் அதுக்குப் பிடிச்சதை மட்டுமே கொடுக்குமாம்.
அதனால அதிர்ஷ்டம் நமக்கு தேவையானதைக் கொடுக்கும்னு நம்பாம நாம் நல்லவங்களா உழைத்து வாழணும். அப்போ அதிர்ஷ்டம் நமக்குத் தேவையானதைத் தானே தரும்.