எமைப் பனையால் அடையாளப்படுத்தினோம்,
பனை தமிழர் எம் போல
கரிய உடல் கொண்டதால்!
எமைப் பனையால் அடையாளப்படுத்தினோம்,
பனை போல் வாழ்வில் வலிமை பெறவேண்டும் என்பதற்காய்!
எமைப் பனையால் அடையாளப்படுத்தினோம்,
பனை போல் வாழ்வில் உயரவேண்டும்
என்பதற்காய்!
எமைப் பனையால் அடையாளப்படுத்தினோம்,
பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு ஈகம் செய்ய வேண்டும் என்பதற்காய்!
எமைப் பனையால் அடையாளப்படுத்தினோம்,
காவலரணில் கேடயமாகி புலி வீரரை காக்க வேண்டும் என்பதற்காய்!
எமைப் பனையால் அடையாளப்படுத்தினோம்,
வாழ்விலும் சாவிலும் பிறருக்கு பயன்பாடு நல்க வேண்டும் என்பதற்காய்!
-வயவையூர் அறத்தலைவன்-